கவிதை எழுதுபவளுக்கு
கோபம் வருகையில்
புதிய உவமைகளைத் தேர்கிறாள்.
தாமரை இலைத்
தண்ணீரைத் திருத்தி
வாழை மஞ்சரியின்
மடல் மேல் இனி
நீர் ஆவேன் என்று சூளுரைக்கிறாள்.
வாழை மஞ்சரியின்
அதி உள்ளடுக்குகளின்
பூ வரிசை காண்கையில்
நினைவில் வருகிறது
நிறைமாதச் சிசுவின்
கை விரல்களின்
மீயொலிச் சித்திரம்.
"ஏ இங்கே பாரேன்"
கோபமுற்றவரையே
கட்டிக் கொள்கிறாள்.
என்ன செய்வது?
கவிதை எழுதுபவளின் கோபம்
இத்தனை
ஆயுள் குறைந்ததாய்
இருக்கிறது.
No comments:
Post a Comment