08 November, 2021

வாழ்வெனும் டிஸ்கோ

 



ஒலிபெருக்கியின்
கருப்பு நிறக்
கன்னங்கள் அதிர்கையிலே
குடுவைக்குள், கோப்பைக்குள்
மதுத் திரவம் அதிரும்.
செவிப்பறையும்
சேர்ந்ததிர்கையில்
அகப்பறையாம் இதயத்துள்
குருதி கூட அதிரும்.
விருப்பமற்ற எதுவொன்றையும்
மௌனமாய் ஏற்கையிலே
அதை விஞ்சும் அதிர்வுண்டு
அறிவீரோ, ஆன்றோரே!

No comments:

Post a Comment