08 November, 2021

ஒரு சுழலின் கதை

 




அவர்களது அன்பின்
நீர்மையின் மேல்
வரையப்பட்ட வட்டத்தை
அப்படியே ஏற்றுக் கொண்டனர்.
அடுத்தடுத்த வட்டங்கள்
முன்னதைவிட
அளவில் சிறியவை
ஆழமானவை.
சமரச வட்டம்
இங்கித வட்டம்
இயலாமை வட்டம்
பொறுமை வட்டம்
பொறுப்பு வட்டம்
முதிர்ச்சி வட்டம்
தியாக வட்டம்
மன்னிப்பு வட்டம்
மறந்து போ வட்டம்
மரத்துப் போ வட்டம்.
பிறகு வந்தவைதான்
பிறழ்வெனும் வட்டமும்
சிதைவெனும் வட்டமும்.
எவரோடும் பேதமில்லை
வட்டங்களில் சில
அவர்களே வரைந்தவை.
வட்டத்துள் வட்டம்
வட்டத்தினடியில் வட்டம்.
இதுதான் ஒரு
சுழல் உருவான கதை.

No comments:

Post a Comment