08 November, 2021

இப்போதைக்கு

 




எனக்கு, சில சொற்களை
உமிழ வேண்டும்.
ஓர் அச்சத்தை
அதிருப்தியை
ஓர் எழுச்சியை
ஏற்பின்மையை
ஒரு வஞ்சினத்தை
வன்மத்தை
ஒரு தாகத்தை
தாபத்தை
ஒரு தன்னிரக்கத்தின்
தாண்டவத்தை..
எதையும் பேசிவிட
இடையூறாகும்
எக்ஸ் க்ரோமோஸோம்களை
என் செய்வது?
இப்போதைக்கு அவையிரண்டையும்
சொற்களுடன் நொறுக்கி
சேமியா உப்புமாவில்
சேர்த்துக் கிளறினால்
விழுங்குவது தெரியாமல்
விழுங்கி விடலாம்.

No comments:

Post a Comment