மழையாடி உயிர் நனைந்த
மழலையிடம் சினங்கொண்டு
கதவடைத்த பெற்றோர்முன்
மனம் வெதும்பிய பிள்ளையின்
கடைவிழிநீர் காணும்வரை
குடைக்கம்பிகள் குத்தியதும்
வலித்ததில்லை மழைக்கு..
நானறிவேன்,அன்று முதல்
எவருமறியாமல் வந்து
இரவுகளின் வெறுமை மட்டும்
இருட்டில் நனைக்கிறது மழை..
பசுமை நிறைந்ததாய் இருக்கிறது தூறல்வெளி...
ReplyDeleteமெல்லியதாய் வலி நிறைந்திருக்கிறது கவிதைகளில்
வாழ்த்துக்கள்....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவன்
ReplyDelete//குடைக்கம்பிகள் குத்தியதும்
ReplyDeleteவலித்ததில்லை மழைக்கு..//
அருமை...
நன்றிகள் பல புதியவன்
ReplyDelete