
வட்டமாய் வெட்டுண்ட வானம்..
குவளையின் வடிவொத்துக்
குறுகிய நீர்வெளி....
வாய்முதல் வால் வரை
அணுக்கள் அனைத்திலும்
அப்பிய மௌனம்..
முதல் முடிவற்ற வட்டப்பாதையில்
வழித்துணை ஏதுமற்று
தனித்துழலும் வேளை..
ஈராயிரம் விசாரிப்புகள் தாங்கி
இல்லத்து வெளிச்சுவர் பதியும்
மழலையின் நுனிவிரல் ரேகைகளில்
மறைந்திருக்கக் கூடுமோர்
மொழியற்ற கவிதையின் முதலிழை..
கண்ணாடிக் குவளையுள்
கடல்சாரா மீனின்
கவி நெய்தலிலுண்டு
புரிதலின் எல்லைகள் கடந்த
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.
நன்றி:உயிர்மை
மெல்லிய உணர்வுகளை மீட்டிச்செல்லும் உங்கள் கவிதை வரிகள் பிடித்திருக்கின்றன.
ReplyDeleteஎந்த வரிகள்னு சொல்ல??? எல்லா வரிகளுமே வைர வரிகள்.....எனக்கு ரொம்பப் புடிச்சுருக்குப்பா....
ReplyDeleteஅன்புடன் அருணா
கவிதை நல்லாருக்குங்க.. தலைப்பு ரொம்பவும் அழகு! :)
ReplyDelete@ இப்னு,காயத்ரி ... உங்களின் முதல் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..பின்னூட்டத்திற்கு நன்றி..
ReplyDelete@அருணா... மிக்க நன்றி,நீங்கள் தரும் ஊக்கத்திற்கு..
//ஈராயிரம் விசாரிப்புகள் தாங்கி
ReplyDeleteஇல்லத்து வெளிச்சுவர் பதியும்
மழலையின் நுனிவிரல் ரேகைகளில்
மறைந்திருக்கக் கூடுமோர்
மொழியற்ற கவிதையின் முதலிழை..//
மீண்டும் வார்த்தைகளில் மனம் வசப் படுகிறது...
@புதியவன்
ReplyDeleteகருத்துகட்கு நன்றி