29 April, 2009

விழியற்றவனின் முகில்

கருவுற்றிருந்த வானின்
கருமையும் களிப்பும் தாங்கி
கதைத்திருந்த கடலின்
கரையிலென்னுடன் சிநேகமானான்
கார்காலத்துக் காலையொன்றில்....

மூங்கில் துளைவழி
மணல்வெளியெங்கும்
ஊற்றித் திளைத்தான்
உயிரின் கரைசலை....

விடியல்களில் வெறுமைக்கும்
வெயில்சாய்கையில் வறுமைக்கும்
மருந்தாகும் குழல்காண மட்டும்
மறுபிறவி வேண்டுமென்றான்...

கூடுடைத்துப் புறப்படும்
வண்ணத்துப்பூச்சியாய்...
ஓடுடைத்து வெளிவரும்
குயிலொன்றின் குழந்தையாய்...
விளைநிலம் பிளந்து
விதையொன்று துளிர்ப்பதாய்..
குழலிசைக்கு நான்செய்த
ஒப்புமைகள் புறக்கணித்தான்...

முகிலொத்தது குழலென்றும்
மழையொத்தது இசையென்றும்..
காலைகளில் முகில்குளிர்ந்தும்
மாலைகளில் முகில்பிழிந்தும்
பொழிவதாய் உவமைகளில்
புதுமை சொன்னான்..

பின்வந்ததோர் பேரிடி நாளில்
விபத்திலவன் மரித்தபின்னர்
முகிலுரியப்பட்ட வானின்
மௌனம் தாளாமல்
கடற்கரை தவிர்த்தும்...

பயணங்கள் யாவிலும்
தொடர்வண்டியின் உட்கூரையைக்
கடந்து போகின்றன
குளிராது பொழியும்
முகில்கள்...

7 comments:

  1. Arumai.. :))))

    //மூங்கில் துளைவழி
    மணல்வெளியெங்கும்
    ஊற்றித் திளைத்தான்
    உயிரின் கரைசலை..// :))

    ReplyDelete
  2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீமதி

    ReplyDelete
  3. Nice work. I came across your blog while “blog surfing” using the Next Blog button on the blue Nav Bar located at the top of my blogger.com site. I frequently just travel around looking for other blogs which exist on the Internet, and the various, creative ways in which people express themselves. Thanks for sharing.

    ReplyDelete
  4. அருமையான கவிதை

    //மூங்கில் துளைவழி
    மணல்வெளியெங்கும்
    ஊற்றித் திளைத்தான்
    உயிரின் கரைசலை....//

    சில வார்த்தை கோர்த்த விதம் கண்டு வியந்தேன்...

    ReplyDelete
  5. நன்றி புதியவன்

    ReplyDelete
  6. மொழி நன்றாக இருந்தாலும் பழகிய கதை, கவிதையில் சலிப்பை வரவழைத்து விடுகி்றது.ஒரு காட்சி / ஒரு அதிர்வு / ஒரு சலனம் / ஒரு நிகழ்வு இவற்றை கவிதையாக்கும்போது கிடைக்கும் பரவசம் இதைப்போன்ற கவிதை கதைகளில் குறைவே.

    உங்களின் மொழி,புதிய கோணம் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    ReplyDelete