19 April, 2009

மழைக்கனவு



மயிலிறகு சேகரிக்கும் சிறுவராய் மாறி
மரக்கிளைகள் ஆர்ப்பரிக்கக் கூடும்...

உச்சாணிக்கிளை முதல் ஊசிவேர் ஈறாக
உவகையில் ஊறிடவும் கூடும்...

தூக்கனங்குருவிகள் தூவும்மழை ருசிக்க
வான்நோக்கி வாய்திறக்கக் கூடும்...

மரம்நீத்த சருகுகள் மழைமணம் தாங்கிய
மண்ணுடன் மையல் கொள்ளக்கூடும்...

சிற்றிலை மடியுறங்கும் சிரைகள்
சிலிர்த்துகண் விழித்திடவும் கூடும்...

அடுக்குமாடிக் குடியிருப்பின்ஆறாவது தளத்தில்
அட்டைப்பெட்டிக்குள் அடைகாக்கும்
சிட்டுக்குருவியின் கனவில்..

மழையெனும் மாமொழியின்
மழலைக் குரல் தாங்கி
தூறல் தரையிறங்கும் வேளை

2 comments:

  1. //சிற்றிலை மடியுறங்கும் சிரைகள்
    சிலிர்த்துகண் விழித்திடவும் கூடும்...//

    அழகு வரிகள்...

    ReplyDelete
  2. நன்றி புதியவன்

    ReplyDelete