21 April, 2009

மருதோன்றி இரவொன்றில்..

உன் நேசம் அளக்கும்

உள்ளங்கை மருதோன்றி

சிவந்திராத காலைகளில்

உடைந்தழும் என்னிடம்

பவழமல்லிக் காம்பும்

புலர்வானின் நிறமும்

அடர்சிவப்பினும் அழகென்று

ஆறுதல் சொன்னாய்...


பிரியங்கள் பிளவுண்ட இந்நாளில்

பின்னிரவின் உறக்கம் உறிஞ்சி

உலராதிருக்கும் மருதோன்றி

உன் நினைவின் ஈரங்களை

உள்ளங்கை நரம்புகளில்

ஓயாமல் எழுதுகையில்

தனித்திருக்கும் எதுவும்

நட்பாகிவிடுகிறதெனக்கு...


ஒற்றையாய் நட்டவன் மேல்

ஊமைக் கோபமும்..

விரிந்திடும் விதியற்ற

வேரின் வியர்வையும்..

தொட்டிச் செடியொன்றின்

பூவிதழில் துளிர்க்கிறது..


கொல்லைக் கிணற்றில்

கொதிக்கும் பாதரசமாய்க்

குழைந்து நெளியும் நிலவும்..

சிறுவர் வண்டியில்

சேர்க்கப்படாது

தனித்து மிதக்குமோர்

நுங்குக் குவளையும்..

தத்தம் வெறுமையைத்

தமக்குள் பகிர்கின்றன...


கடந்து போன பூனையின்

கால் எதையோ இடறிட..

அலைகள் மறுக்கப்பட்ட

ஆழியின் துயரத்தை

உப்பளத்து நீருமிழ்ந்த

உவர்ப்புத் துகள்கள்

உடைந்த குடுவையிடம்

உரத்துக் கூற....


மனதின் இறுக்கத்தில்

மறுகாது தப்பிட

நுணுங்கி விரியும்

நுரையீரல் பூக்களின்

நீள்மூச்சுக் கூட்டங்கள்

அளந்து தோற்கின்றன

இவ்விரவின் நீளத்தை..


வியப்புகள் கொணரும் விடியலில்..

காட்சிப் பிழையொன்றின்

சாத்தியங்கள் களைந்த பின்பும்

குங்குமமாய்ச் சிவந்திருந்த

கைகளுக்குள் அழுகிறேன்

அளந்திட ஏதுமற்று...


http://youthful.vikatan.com/youth/gowripriyapoem23042009.asp

நன்றி: விகடன். காம்

11 comments:

  1. //கொல்லைக் கிணற்றில்
    கொதிக்கும் பாதரசமாய்க்

    குழைந்து நெளியும் நிலவும்..

    சிறுவர் வண்டியில்

    சேர்க்கப்படாது

    தனித்து மிதக்குமோர்

    நுங்குக் குவளையும்..

    தத்தம் வெறுமையைத்

    தமக்குள் பகிர்கின்றன//


    வர்ணித்த விதம் அழகு :)

    ReplyDelete
  2. மருதாணி ரொம்ப அழகா இருக்குது!

    ReplyDelete
  3. //தொட்டிச் செடியொன்றின்

    பூவிதழில் துளிர்க்கிறது..//

    கவிதையெல்லாமே அருமை..இந்த வரி ரொம்ப பிடிச்சிருந்தது :-)

    ReplyDelete
  4. ஆயில்யன், சென்ஷி, புனிதா...
    உங்களின் முதல் வருகை மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது...
    பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  5. மருதாணி கவிதை அழகு, கௌரி....:)

    ReplyDelete
  6. மிக்க நன்றி நண்பர்களே

    ReplyDelete
  7. hi,

    Nice..

    I loved the picture on your blog.

    May i know where this place is ? Looks like smoky mountains!

    ReplyDelete
  8. hi vetri..thank u for the comment.. i don't exactly know.. got the picture from google

    ReplyDelete
  9. //கொல்லைக் கிணற்றில்
    கொதிக்கும் பாதரசமாய்க்

    குழைந்து நெளியும் நிலவும்..//

    இந்த உவமை வெகு அழகு...

    ReplyDelete
  10. புதியவன் நன்றி உங்களின் கருத்துகட்கு

    ReplyDelete
  11. * மனதின் இறுக்கத்தில்

    மறுகாது தப்பிட

    நுணுங்கி விரியும்

    நுரையீரல் பூக்களின்

    நீள்மூச்சுக் கூட்டங்கள்

    அளந்து தோற்கின்றன

    இவ்விரவின் நீளத்தை..//

    eppaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    !!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete