விழிகள் விரித்து
விற்புருவம் உயர்த்தி
மாயக் கதை கேட்ட
மழலையின் நெற்றியை
இருநொடிகள் பகுத்துப் போகும்
எழில்மிகு சுருக்கங்களொத்து
செவ்வகத் துண்டுகளாய்ச்
செவ்வானைப் பிரித்திருந்த
சன்னலின் குறுக்குக் கம்பிகளில்...
அனுமதி கோராது
அறையுள் பிரவேசித்த
அறிமுகமற்ற மரமொன்றின்
அழகிய சருகின் நுனி
எழுதிப் போனது
இக்கவிதையை.
கவிதையின் பாடுபொருளை.. 'இன்னதென்று..' சொல்லிவிட முடியாத..விதத்தில்.. கவிதைப் படைக்கப் பட்டிருக்கிறது..
ReplyDeleteஆனால்...கவிதையின் பாடுபொருள்..இங்கே 'கவிதைத்' தான் என்பது..கூர்ந்துப் படித்தால் புரிந்துவிடும்..
அறிமுகமற்ற மரமொன்றின் அழகிய சருகின் நுனி..
அனுமதியற்று அறையுள் பிரவேசித்து..இந்தக் கவிதையை ஏன் எழுத வேண்டும்..?
ஏகப்பட்ட கேள்விகளை..எழுப்பத் தூண்டிய உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் கௌரி..!
( செவ்வகத் துண்டாய் செவ்வானைப் பிரித்த ஜன்னல் கம்பிகள்..தான் இந்தக் கவிதைக்கான வாசல்.. அந்த ஜன்னல் கம்பிகளை...கவிஞர் எதற்கு ஒப்பிடுகிறார் தெரியுமா..?
விழிகள் விரித்து..மாயக் கதைகள் கேட்கும் மழலையின் நெற்றியில் ஆச்சரியத்தால்..இருநொடிகள் பகுத்துப் போகும்..சுருக்கங்களுக்கு சமமாம்..! )
(கவிதையின் ஆரம்பம்..மழலையின் நெற்றிச் சுருக்கத்தில் தொடங்கி.. பெயர் தெரியாத மரமொன்றின் சருகு நுனியாக விரிகிறது..- 'சருகு' என்று இலையின் முதுமையையும்..மழலை என்று பால்யத்தையும்... உள்ளடக்கி...கவிதை...யதார்த்தப் பக்குவத்தில்...என்னை பரவசப்படுத்தி விட்டது..)
மிக்க நன்றி..கௌரி..!
:)
நன்றி இளங்கோ
ReplyDelete//மழலையின் நெற்றியை
ReplyDeleteஇருநொடிகள் பகுத்துப் போகும்
எழில்மிகு சுருக்கங்களொத்து//
வாவ்...அற்புதமான உவமை...
மிக்க நன்றி புதியவன்
ReplyDeleteமழலையின் நெற்றியை
ReplyDeleteஇருநொடிகள் பகுத்துப் போகும்
எழில்மிகு சுருக்கங்களொத்து
செவ்வகத் துண்டுகளாய்ச்
செவ்வானைப் பிரித்திருந்த
சன்னலின் குறுக்குக் கம்பிகளில்...
Arumaiyana oppeedu...