08 December, 2021

********


 



உங்களோடு என்னால்
உடன்பட முடியாது.
நீங்கள் நினைப்பது போல்
வசீகரமற்றதல்ல
ஆமை.
அதற்குச் சிறகுகள்
உண்டு.
நான் பார்த்தேன்.
அப்போது
அது அதன் போக்கில்
நீரின் அடியில் இருந்தது.

No comments:

Post a Comment