08 December, 2021

......

 



நெளியும் பிம்பங்களை
நீந்திக் கடந்து
நிச்சலனப் பாறையை
அடைந்தது ஆமை.
பிறகு
பாறையும் ஆமையும்
கிடந்தன
குளிரோடு குளிராய்
ஈரத்தோடு ஈரமாய்
இருளோடு இருளாய்.
இமைமூடிப் பார்த்திருந்தான்
கரையோரப் புத்தன்.

No comments:

Post a Comment