உங்கள் வீட்டு
உத்திரத்திலேயே இருக்கட்டும்
தொண்ணூறு கண்ணாடிப்
பந்துகள் கொண்ட
தொங்கும் விளக்கு.
என்னிடம் இருக்கிறது
குபுகுபுவென
குமிழிகள் குதித்தெழும்
வளையமும்
சோப்பு நீர்க் குப்பியும்.
வெளியில் வந்து
பார்த்தால் புரியும்..
சிதறும் ஒளியை விடப்
பேரழகாய் இருக்கிறது
பறக்கும் ஒளி.
No comments:
Post a Comment