சந்தனத்தில் முடைந்த
அம்பறாத்தூணிக்குள்
ஏந்தித் திரிகிறீர்கள்
தகதகக்கும்
பொன் அம்புகளை.
இலக்கு
இலக்கின் பின் இலக்கு
இலக்கின் பின்
இலக்கின் பின்
இலக்கு.
மன்னித்து விடுங்கள்.
என் சின்னக் கவிதைக்குள்
உங்களுக்குப் பிடிக்காத
ஒரு விஷயத்தைச்
செய்து விட்டேன்.
சுண்டாட்டத்தின்
ஸ்ட்ரைக்கர் வில்லையை
எடுத்தோடிச் சென்று
இல்லாத கிணற்றினுள்
எறிந்து விட்டேன்.
தேக்கின் சருகுகளுடன்
அழுக்கேறிய நிலவுடன்
அமைதியாய் அது
அங்கேயே மிதக்கிறது.
No comments:
Post a Comment