15 August, 2021

கப்பல்

 


மகிழுந்துகள் ஓய்ந்திருக்கும் 

அடுக்ககத்தின் அடித்தளத்து 

மூலை ஒன்றில் 

வண்ண வண்ணக் கடல்கள் மீது 

அப்பா கப்பல் ஓட்டுவதாய் 

தாயிடம் சொன்னான் 

இஸ்திரிக்  காரரின் மகன்.


அடுத்த வைகறையில் 

அம்மாவும் அப்பாவும் 

கப்பலின் கூரை  திறந்து 

பிட்டுப் பிட்டு அடுக்கினர் 

கருஞ்சாம்பல் படர்ந்த சூரியனை. 

1 comment:

  1. நானும் அந்த மாலுமியின் ரசிகை தான்,......

    ReplyDelete