உறுப்பு மாற்று
சிகிச்சையில் அகற்றப்பட்ட
இதயத்தைப் பார்த்தாள் இனியா.
"அம்மா, இதயம் ஏன் சிவப்பாய் இல்லை?"
"இது பதப்படுத்தப்பட்டது "
"அம்மா,
ஓவியங்களில் காண்பது போல்
இதயம் ஏன் smooth- ஆக இல்லை"
" உண்மையில்
இதயங்கள் smooth- ஆக இருப்பதில்லை
பழகிக் கொள் மகளே"
No comments:
Post a Comment