பயணத்துடனேயே தொடங்கின
எதிரிருக்கைச் சிறுமியின் கேள்விகள்..
பின்னோக்கியோடும் மரங்கள்..
வெகுநேரமாய் உடன்வரும் மேகம்..
அபாயச் சங்கிலியின் அவசியம்..
அடுத்த இருக்கைத் தாத்தாவின்
ஆங்கில நாளிதழென
எதையும் மறவாமல்
வினாக்கள் எழுப்பினாள்..
சிறிதுநேரம் பேசிவிட்டு
அமர்ந்தபடி தூங்கிப்போன
அம்மாவின் முகத்தை
அதிசயமாய் நோக்கிப்பின்
எதுவும் பேசாமல்
இறுக அணைத்துக் கொண்டாள்,
கிடத்துகையில் மூடி
நிமிர்த்துகையில் திறக்கும்
நீலவிழி கொண்ட பொம்மையை.
நிறுத்தமொன்றின் இணைப்பாதையில்
இளைப்பாறிய வண்டியின் சன்னலில்
இவளைக் கண்டதும் கையசைத்தாள்
இதே போன்ற பொம்மையுடன்
இன்னுமொரு சிறுமி.
me the 1st :)
ReplyDeleteகிடத்துகையில் மூடி
ReplyDeleteநிமிர்த்துகையில் திறக்கும்
standin!!
மிக அழகான கவிதை
ReplyDeleteகவிதையிலிருந்து வெளியே எறிகிறது கடைசி வரி
மூன்றும் அழகு!
ReplyDelete//சிறிதுநேரம் பேசிவிட்டு
ReplyDeleteஅமர்ந்தபடி தூங்கிப்போன
அம்மாவின் முகத்தை
அதிசயமாய் நோக்கிப்பின்
எதுவும் பேசாமல்
இறுக அணைத்துக் கொண்டாள்,
கிடத்துகையில் மூடி
நிமிர்த்துகையில் திறக்கும்
நீலவிழி கொண்ட பொம்மையை.
//
டாக்டர் நான் எந்த வார்த்தைகளை உபயோகப்படுத்திப் பின்னூடம் இட்டாலும் நான் சொல்ல நினைத்ததற்கு சற்று குறைவாகவே போய்விடும்.
ஸ்டெத்தைப் பிடிக்கும் நேரத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் பேனாவையும் பிடியுங்கள். இது என் அன்பு உத்தரவு.
:)
கவிதை மிக அழகு ப்ரியா :-)
ReplyDelete:-)))))
ReplyDeleteரொம்ப நல்லாயிருக்குங்க..
ReplyDeletekartin
ReplyDeletenesamitharan
முத்துராமலிங்கம்
அப்துல்லா
புனிதா
raghavendran
சென்ஷி
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி