பள்ளி விடுதிக்கு
அடிக்கடி வந்தன
ஒரே உறையிலிடப்பட்ட
சில கடிதங்கள்
எவரது எதுவென்றெல்லாம்
கேள்வி யெழுப்பாமல்..
தாத்தாவின் காகிதத்தில்
நாயின் கால்
வலப்புறம் தனித்தும்
புறாவினது இடப்புறம்
சுழன்று மிருக்கும்.
நுணுக்கி எழுதும்
அம்மாவின் கடிதம்
அவ்வப்போது ஏந்திவரும்
எண்ணெய் அல்லது
மஞ்சள் கறையை..
அப்பா எழுதுவது
அலுவலகத்து மையில்
அவசரமாய்...
ஓரங்களில் கோடிட்டு
ஒழுங்காய் எழுதுவது
தங்கை..
அனைவரின் தகவலையும்
தட்டச்சு செய்யும்
தங்கையின் இன்றைய மின்மடலைக்
கூர்ந்து நோக்குகையில்
தெரிகின்றன
கணினித்திரையின் நுண்சதுரங்கள் .
http://youthful.vikatan.com/youth/gowripriyapoem15062009.asp
ஆமா தொழிற்நுட்பம் வளர்ச்சியில் சின்ன சின்ன சந்தோசங்களை இழந்து இருக்கோம் ல.
ReplyDeleteம்ம்ம் கௌரி நிறைய எழுதுங்க ஆனா ஒரே நாளில் பின்னூட்டம் போட வைக்கிறீங்க
அசத்தல் :-)
ReplyDeleteகோர்க்கப்பட்ட உவமைகள்
ReplyDeleteநாயின் கால் புறாவின் கால்
மஞ்சள் படிந்த -அழகு என்றால்
கடைசி வரி பேரழகு
a super poem, really!
ReplyDeleteஅநியாயத்துக்கு அழகு..:-)
ReplyDeletekavithai arumai.
ReplyDeleteஎல்லாரும் சொல்லிடாங்க எதில இனிமே சொல்ல வார்த்தைகளை யோசிக்கிறேன்
ReplyDeleteவாழ்த்த வயது இருக்கா தெரியவில்லை தோழி இருந்தலும் வாழ்த்துக்கள்
மேலும் வாழ்க உங்கள் பணி..
அருமை ....... அப்படியே நிஜத்தை வடித்திருக்கிறீர்கள்.
ReplyDelete