கவலை யேதுமற்று
அடர்மஞ்சள் சிறகசைத்து
அடிக்கடி வருவதுபோல்
அன்றும் வந்தது அது..
திறந்திருந்தது தமக்கையின்
தாவரவியலேடு
பசையுலர்த்தும் பொருட்டு..
பருத்த புத்தகங்களில்
பதப்படுத்தப்பட்டு
பதிவேட்டிற் கிடம்பெயர்ந்த
சங்குப்பூவிதழோரம்
அமர்ந்திருந்து
கிளம்ப எத்தனிக்கையில்
சில நொடிகள் படபடத்தது
இயல்புக்கு மாறாய்...
சிலநாட்களுக்குச்
சீனிக் கரைசல்..
தொடர்ந்த நாட்களில்
தேன் கிண்ணம் ..
சற்றே வளர்ந்ததும்
பூச்செடிகள் ...
எத்தனை செய்தும்
இன்றுவரை வரவில்லை மீண்டும்..
தேர்வுக்குப் பின்பான
ஆணிதுளைத்த பதிவேட்டில்
ஒட்டியிருக்கின்றன இன்னும்
கொஞ்சமாய் சிறகின் மஞ்சளும்..
ஒடிந்து போன அதன் காலும்..
//பதிவேட்டிற் கிடம்பெயர்ந்த
ReplyDeleteசங்குப்பூவிதழோரம் //
12th போய் வந்த நினைவு வருது. ஆனா நான் பயாலஜி படிச்சது மூணே மாதம் தான். எங்களுக்கு கம்புயூட்டர் சன்ஸ் வந்தடுச்சி. அதனாலே ரிக்காட்ர் வேலை அதிகம் செய்யலை. அக்கா பாட்டணி படிச்சாங்க. அவங்களுக்கு இப்படி பூ பட்டாம் பூச்சி இன்னும் பல பிடிச்சி தந்து இருக்கேன். இந்த அக்காகளே தங்கைகளை இதுக்கு தான் வளர்ப்பாங்க தெரியுமா?
ஆனா நல்லா அக்காஸ்.
அருமையாக கவிதை. இடைவெளி விட்டிருக்கலாம்.
ReplyDelete‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
அழகான கவிதை ப்ரியா
ReplyDeleteபடிமங்களும் சொற்கட்டுமானமும்
ReplyDeleteஊடும் பாவுமாய் நெய்திருக்கின்றன
இந்த கவிதையை ...
அழகு !
நல்லக் கவிதைகள்
ReplyDelete