இருசக்கர வாகனங்களின்
இருக்கையின் பின்கம்பிகளில்...
கூட்டமற்ற திரையரங்குகளின்
கூரை மின்விசிறிகளில்...
கடற்கரையில் வானளக்கும்
பட்டங்களின் வால்களில்..
இரட்டைப் பொருள் பாடல்களின்
ஒற்றைச் சுழிக் கொம்புகளில்...
புதர்கள் மண்டிய பூங்காக்களில்
பதின்மவயதுப் பார்வைக் காந்தங்கள்
பாய்ச்சும் மின்னலை நெளிவுகளில்...
கூட்டுக் குடும்பங்களில்
கடிதம் விநியோகிக்கும்
ஆறரை வயதுத் தூதுவனின்
அரைஞான் கயிற்றிலென...
தத்தம் தலைவிதிக்கேற்ப
தூக்கில் தொங்குகின்றன
பொதுவிடங்களில் காட்சிப் பொருளாகும்
புனிதக் காதல்கள்.
நன்று!! இவையெல்லாம் காதலின் பரிணாம வளர்ச்சி என்று கூறுகிறார்கள்.....
ReplyDeleteஇத படிங்க
http://ithyadhi.blogspot.com/2008/01/blog-post_7685.ஹ்த்ம்ல்
-சதீஷ்
4urbeloved.com
Good observation :-)
ReplyDeleteஅருமை சகோதரி..ஒவ்வொரு வரியை காட்சிப்படுத்துகிறீர்கள் !
ReplyDelete@சதீஷ்... முதல் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.. கருத்துக்கு நன்றி...
ReplyDelete@புனி... சிறுவர்கள் முதல் முதியோர் வரை நிறைய பேர் வரும் பூங்காவொன்றில் இன்னும் சிறு பிள்ளைகளாகவே தோற்றமளிக்கும் காதலர்களைப் பார்த்து நொந்து போய் எழுதியது....
@ரிஷான்.. வருகையும் கருத்தும் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கின்றன... மிக்க நன்றி
புனிதக் காதல்களில் போட்டிருக்கும் “” மார்க்கை எடுத்துவிடுங்கள். பளீர் கவிதை.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் நர்சிம்.. " " மார்க்கை எடுத்து விட்டேன்..
ReplyDelete//பொதுவிடங்களில் காட்சிப் பொருளாகும்
ReplyDeleteபுனிதக் காதல்கள்//
முழுக் கவிதையும் இங்கு அர்த்தம் பெற்றுவிடுகின்றது... சிறந்த பதிவு...
http://spggobi.blogspot.com/
kadaisi variyil vaithirukkum kanni ....
ReplyDeletearputhamaana sorkattumaanam
alagaana edhugaigal...
"mugoortham ariyaatha muththangal
saathiram paaratha sarasangal
maargazhi maatham therukkalil
matraya naatkalil puthargalil
naagarigam nasindha pinney
naalugaal enna? adhil paathi enna?
peyar ondruthaney "
enbathai pei araindaar pola solgiradhu indha kavithai vazhthukkal
-nesamithran.blogspot.com
கோபிநாத்,
ReplyDeleteநேசமித்திரன் ..
மிக்க நன்றி வாசிப்புக்கும் கருத்துகட்கும்..
நேசமித்திரன் ..
பின்னூட்டத்தில் நீங்கள் எழுதியிருக்கும் கவிதை அருமை
//கூட்டுக் குடும்பங்களில்
ReplyDeleteகடிதம் விநியோகிக்கும்
ஆறரை வயதுத் தூதுவனின்
அரைஞான் கயிற்றிலென...//
வாவ்...மிக அழகு...