28 May, 2009

அழகு

உடையின் நிறத்தில்
உதட்டுச் சாயமும்
நகையும் செருப்பும்
நகப் பூச்சுமென
நிறங்கள் புசித்து
நீளுமிவ்வாழ்வின்
இன்னுமோர் பிறந்தநாளில்
எதை விடவும்
அழகாய் இருக்கிறது
இரட்டைவரிக் காகிதத்தில்
இதழுக்கொரு நிறந்தீட்டி
மழலையொன்று வரைந்து தரும்
மலரின் வாழ்த்து.

14 comments:

  1. மிக ஆச்சயர்மாய் இருக்கிறது. எல்லா கவிதைகளும் படித்தேன்.உயிர்மை உட்பட. உங்கள் தளம் வேறு.வாழ்த்துக்கள்.(இந்தப் பக்கம் வருவதற்கும் பயமாகவும் இருக்கிறது.கவிதைகள் பற்றி ஒன்றும் தெரியாது என்பதனால்..(என்னைப் பொருத்தவரை, மடக்கி மடக்கி எழுதினாலே கவிதை என்று நினைத்திருந்தேன்!)

    ReplyDelete
  2. irattai vari kaakitham...
    niram endra kuriyeedu...

    vaazhthukkal
    azhagu... perazhagu...!

    ReplyDelete
  3. வார்த்தைகளின் தேர்வு அருமை ...
    இன்னும் நீளமாய் எழுதியிருக்கலாம்....

    ReplyDelete
  4. அழகான கவிதை :)

    நானும் கவிதை என்ற பெயரில் ஏதோ கிறுக்கிக் கொண்டு இருந்தேன். உங்களைப் போன்றவர்களின் வலைப்பூக்களைப் படிக்கத் துவங்கியதில் இருந்து குற்ற உணர்ச்சியில் எழுதுவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டேன், நமக்கு என்ன வருதோ அத மட்டும் ஒழுங்காப் பார்ப்போம் என்ற எண்ணத்தில்.

    ReplyDelete
  5. அழகு ப்ரியா :-)

    ReplyDelete
  6. இப்பொழுதெல்லாம், தினமொரு அழகான கவிதை வேண்டுமென்றால் இங்குதான் வருகிறேன்.. :-)

    ReplyDelete
  7. அருமையான கவிதை. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  8. வார்த்தைகளில் எளிமை!
    கருத்தோ அருமை!
    மிகவும் ரசித்தேன்,
    முதன் முறையாய் வருவதால்,
    தூறலெல்லாம் பனியாய்
    உறைந்த வெளி(valley)யையும்...

    ReplyDelete
  9. நர்சிம்
    நேசமித்ரன்
    குமார்
    எம்.எம்.அப்துல்லா
    புனிதா
    Raghavendran
    $anjaiGandh!
    உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துகட்கும் நன்றி :))



    கவிக்கிழவன்
    நவீன்
    SUMAZLA/சுமஜ்லா
    ஸ்ரீ....
    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துகட்கும் மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  10. அழகு கொள்ளை அழகு இவ்வளவு நாளாக படிக்காமல் விட்டுவிட்டேனே

    ReplyDelete
  11. //இரட்டைவரிக் காகிதத்தில்
    இதழுக்கொரு நிறந்தீட்டி
    மழலையொன்று வரைந்து தரும்
    மலரின் வாழ்த்து.//

    அழகு...

    ReplyDelete