28 May, 2009

கவனம்


இருசக்கர வாகனத்தை
இயக்கும் தோரணையில்
கைவிரல்கள் மடக்கி
வாயில் ஒலியெழுப்பி
கரையிலோடும் சிறுவனின்
கவனமீர்க்க முடியாமல்
மழைக்காலத்து ஏரியை
மௌனமாய்க் கடக்கிறது
விமானமொன்றின் நிழல்..

17 comments:

  1. ம்ஹூம். சான்ஸே இல்ல.

    ReplyDelete
  2. அற்புதம்.. :-)

    ReplyDelete
  3. என்ன பின்னூட்டம்
    இடுவதென்று தயங்கியே வெளியிருந்தேன்!!

    படத்தோடு இதைப்
    படித்த பின் என் நிலையில்
    இன்னும் கவனமாய் :))

    ReplyDelete
  4. Mannikavum thozhi
    indhavil edho ondru kuraigiraarpol
    thondrugiradhu..
    valakkamanathoru aluththam illai..

    -nesamithran.blogspot.com

    ReplyDelete
  5. நர்சிம், ராகவேந்திரன், கார்த்தி
    வருகைக்கும் கருத்துகட்கும் மிக்க நன்றி..

    @ நேசமித்திரன்- கருத்துக்கு மனமார்ந்த நன்றி... குறைவதெதுவென்று அறிந்து திருத்துவதில் இனி கவனம் கொள்கிறேன்..

    ReplyDelete
  6. கவிதை நல்லாருக்கு....

    இந்த படத்தைப்பார்த்ததும் எனக்கு தோன்றிய வரிகள் இவை...

    அலை வந்து அடித்துச்செல்லும்
    வரைதான் சந்தோசம்
    பாதச்சுவடுகளை...

    ReplyDelete
  7. நவீன், மயாதி...
    முதல் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துகட்கு நன்றி..
    மயாதி..உங்களின் கவிதையும் அருமை

    ReplyDelete
  8. புரியலையே !! ??

    ReplyDelete
  9. கச்சிதம்
    கடைசி மூன்று வரி எதிர்பாரதது இதுவரை படித்திராததும் கூட :)

    ReplyDelete
  10. :-) வித்தியாசமாய்..இரசிக்க வைக்கும் வரிகள் :-)

    ReplyDelete
  11. சான்சே இல்ல ப்ரியா...அருமை..மறுபடி மறுபடி இந்த பக்கம் இழுக்கிறது இந்த வரிகள் :-)

    ReplyDelete
  12. @குமார்
    எத்தனை பெரிய விஷயங்கள் கண் முன் இருந்தாலும் தமக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களில் மட்டுமே கவனமாயிருக்கின்றனர் குழந்தைகள் (அது எத்தனை சிறியதாக இருந்தாலும், கற்பனையாகவே இருந்தாலும்)

    @ அய்யனார்
    உங்களின் முதல் வருகையும் கருத்தும் ஊக்கம் அளிக்கின்றன. நன்றி.

    @புனிதா..
    மிக்க நன்றி புனி... கருத்துக்கு மகிழ்ச்சி

    ReplyDelete
  13. ada ... miga arumai....
    On seeing ur blogs I guess you talk with your heart many times a day....
    Read the book 'The Alchemist', that will surely be suitable to you.....

    ReplyDelete
  14. மௌனமாக கடக்கிறது விமான நிழல்

    அருமைங்க.......

    கௌரி உங்க விசிறியாயிட்டேன்.

    ReplyDelete
  15. //மழைக்காலத்து ஏரியை
    மௌனமாய்க் கடக்கிறது
    விமானமொன்றின் நிழல்..
    //

    ரொம்ப வித்தியாசமான வரிகள்...

    ReplyDelete