27 March, 2009

பிழைபொறுத்தல்


கவிதை சமைக்கையிலே
சிந்தை கலைப்பதற்கும்..
நாள்காட்டி ஓரங்களில்
நாய்க்குட்டி வரைவதற்கும்..
கூட்டாஞ்சோறாக்க
தீப்பெட்டி கேட்பதற்கும்..
காகிதப் பைகளிலே
காற்றூதி வெடிப்பதற்கும்..
அழிப்பான் தேடப்போய்
அலமாரி கலைப்பதற்கும்..
கடிந்து கொள்ளப்படும்
குழந்தைகள் எவரும்
காகிதக் கப்பல்கள்
கவிழும் வேளைகளில்
மறந்தும் பழிப்பதில்லை
மழையை.

9 comments:

  1. nalla irukku gowri..

    ippothellam nalla thamiz kavithaigalum, thamizum
    vaasippatharkku vayppum , neramum kidaikkirathu

    nanri kavithai padaipporukkum
    kavithai padaipporai padaiththa iraivanukkum

    thamz valarppom

    ReplyDelete
  2. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  3. மிகவும் அழகான கவிதை சகோதரி.
    எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்களென ஆச்சரியமாக உள்ளது. வரிகள் அருமை.

    ReplyDelete
  4. ம்ம்ம் ...ரொம்ப நல்லாருக்கு கௌரி!!!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  5. குழந்தைகள் உலகின்..முடி சூடா ராணித் தான் நீங்கள்...
    பால்யத்தை...இப்படி..கப்பல் கப்பலாக இன்னும் எத்தனை வச்சிருக்கீங்க..?

    ReplyDelete
  6. ரிஷான், அருணா, இளங்கோ...
    பின்னூட்டத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  7. //காகிதக் கப்பல்கள்
    கவிழும் வேளைகளில்
    மறந்தும் பழிப்பதில்லை
    மழையை.//

    ரொம்ப நல்லா இருக்கு...

    ReplyDelete
  8. நன்றி புதியவன்

    ReplyDelete
  9. பால்யத்தின் படிக்கட்டில் இறங்கிவர செய்தமைக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியல...

    :)))))

    ReplyDelete