
புங்கைமர இலையினின்று
புலம்பெயர்ந்து சென்றுவிட்ட
பெயர் தெரியாப் பூச்சியின் கூட்டில்..
வெயில்பிளந்த தரையிடுக்கில்..
வெளிச்சுவரின் வெடிப்புகளில்..
தூறல்கண்டு காலியான
துணிக்கொடியின் முடிச்சுகளில் ..
முகிலின்துளி தாங்கியதால்
முற்றத்தில் மறுக்கப்பட்டு
முன்கதவில் சாய்ந்துநின்ற
முகஞ்சுருங்கிய குடைமடிப்பில்....
கடுங்காற்றில் தெருவொதுங்கிய
காகிதத்தில் துயில்கொண்ட
ஓவியக் குழந்தையின்
உள்ளங்கைப் பள்ளங்களில்..
உடன்கொணர்ந்த கவிதைகளை
ஊற்றிச் செல்கிறது மழை...
anaithum arumai...thodarndhu ezhudavum...
ReplyDeletewow..
ReplyDeletepoem with lot visuals
i appriciate your visuals with minute details
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஜெயதேவ் மற்றும் மனுஷம்
ReplyDeleteமழைதான் எத்தனை அழகிய வரிகளை உங்களிடம் தந்துசென்றிருக்கிறது..!
ReplyDeleteஅழகு !
மழையை...மழலையை..அழகாய் வார்த்தெடுக்கும் உங்களுக்கு..என் வணக்கங்கள்..
ReplyDelete:))
ரிஷான் மற்றும் இளங்கோ...
ReplyDeleteஉங்களின் கருத்துகள் மகிழ்ச்சி அளிக்கின்றன...
ஊக்கத்திற்கு நன்றி
//கடுங்காற்றில் தெருவொதுங்கிய
ReplyDeleteகாகிதத்தில் துயில்கொண்ட
ஓவியக் குழந்தையின்
உள்ளங்கைப் பள்ளங்களில்..
உடன்கொணர்ந்த கவிதைகளை
ஊற்றிச் செல்கிறது மழை...//
மீண்டும் மீண்டும் ஆச்சரியமூட்டும் வரிகள்...
@ புதியவன்
ReplyDeleteமிக்க நன்றி உங்களின் கருத்துகட்கு
miga arumai.mugam surungiya kudai madippu --indha varigal ennai migavum kavarndu vittadhu.valthukkal.
ReplyDelete