பிடிக்கப் பிடிக்க வியர்க்கும்
உள்ளங்கை அல்லது உள்ளம்..
பிடிக்கப்படுதலின் வெம்மையில்
நெளிந்து குறுகும் புறங்கை...
பிடித்தலுடன் இணைந்தே வரும்
மாத்திரை கூடிய பீடித்தல்..
ஏதுமற்ற விரலிடுக்குகளில்
எனக்கான காற்றோ மழையோ
வியர்வையை வெம்மையை நீக்க
விடுதலும் விடுபடுதலும்
வெறுமை அல்ல, வீரியம்
No comments:
Post a Comment