பேரன்பு, கொடும் வெறுமை
பிறரறியாக் கண்ணீர்
களிப்பும் காய்ச்சல் யாவும்
கண்டிருக்கும் சிற்றறை..
உறங்காத இரவுகளில்
உடன் சலனிக்கும் திரைச்சீலை..
நனைந்த தலையணை
நனையாத நாட்குறிப்பு...
அறையின் முகம் காட்டும்
அழுக்கில்லா மின்விசிறியின் மையம்..
உடை பிடித்திழுக்கும்
உலர்ந்த செடியொன்றின்
உடையாத முட்கள்...
பிடித்த உணவகத்தின் தேநீர் என
எளிதில் துறக்கக் கூடுவதில்லை
பாழ்மனதின் போர்க் கணங்களைப்
பகிர்ந்திருக்கும் பலதையும்
என்றேனும் உடையப்போகும்
என்புதோல் தசைக்கூட்டையும்..
பிறரறியாக் கண்ணீர்
களிப்பும் காய்ச்சல் யாவும்
கண்டிருக்கும் சிற்றறை..
உறங்காத இரவுகளில்
உடன் சலனிக்கும் திரைச்சீலை..
நனைந்த தலையணை
நனையாத நாட்குறிப்பு...
அறையின் முகம் காட்டும்
அழுக்கில்லா மின்விசிறியின் மையம்..
உடை பிடித்திழுக்கும்
உலர்ந்த செடியொன்றின்
உடையாத முட்கள்...
பிடித்த உணவகத்தின் தேநீர் என
எளிதில் துறக்கக் கூடுவதில்லை
பாழ்மனதின் போர்க் கணங்களைப்
பகிர்ந்திருக்கும் பலதையும்
என்றேனும் உடையப்போகும்
என்புதோல் தசைக்கூட்டையும்..
தனிமை சில பல முறை கொடியதே.
ReplyDelete