
நிறமிகள் கலந்திடாத பொழுதுகளில்
எதிர்ப்படும் யாவுமாய்
இருக்கிறது நீர்..படர்ந்து நீங்கும்
பகல்களுக்கிடையில்
எப்போதும் எங்கேனும் இருக்கிறது இரவு
இருண்டு விரியும்
அண்டத்தின் துண்டமென..
எவருமிலாததாய்
அறியப்படும் பொழுதுகளில்
நிறைய இருக்கிறேன் நான்..
யாவுமாய் இருக்கிறதோர் கவிதை
///படர்ந்து நீங்கும்
ReplyDeleteபகல்களுக்கிடையில்
எப்போதும் எங்கேனும்
இருக்கிறது இரவு
இருண்டு விரியும்
அண்டத்தின் துண்டமென..///
Nice One...
ஆமாம் ஆமாம் அற்புதம் கௌரி
ReplyDeleteநல்ல கவிதை கௌரி. ஏன் ரொம்ப நாளா ஆளைக்காணோம்
ReplyDeleteலாவண்யா அக்கா.. எழுதும் சூழல் அமையல :)
ReplyDeleteஒன்னும் தோணவும் இல்லைனும் சொல்லலாம்
இளவட்டம், புபேஷ், எட்வின் ஐயா, நன்றிகள் :)
ReplyDeleteஎவருமிலாததாய்
ReplyDeleteஅறியப்படும் பொழுதுகளில்
நிறைய இருக்கிறேன் நான்..
நிறைவான வரிகள்..
அருமையான ரச்னையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..
நல்ல கவிதை ...
ReplyDeleteசொற்சேர்க்கை கவிதைக்கு ஒளியாக இருக்கிறது.இருண்டு விரியும் அண்டத்தின் துண்டம்.. அருமை.
ReplyDelete// நிறமிகள் கலந்திடாத பொழுதுகளில்
ReplyDeleteஎதிர்ப்படும் யாவுமாய்
இருக்கிறது நீர்.. //
வரிகள், நின்றுவிடுகின்றன அகலாமல் மனதில்.
மனம் கவர்ந்த கவிதை. வாழ்த்துகள்!
கலக்கம் இல்லாதவரை தெளிவுதான்.
ReplyDeleteதெளிவுள்ளவரை வருவோரை ஈர்ப்பதும்
எழிதுதான். கலப்படமற்ற அசல். அக் மார்க்.
தனிமைகள் என்பது ஒன்றுமில்லாதது என்ற பிம்பத்தை
ReplyDeleteநொறுக்குகிறது உங்கள் கவிதை
வாழ்த்துக்கள்
-இயற்கைசிவம்
இராஜராஜேஸ்வரி, ஹரணி ஐயா , ப.தியாகு, vasan, இயற்கைசிவம்.. நன்றிகள் :)
ReplyDeleteஅனைத்தும் மிக அழகான ஆழமான வரிகள்!
ReplyDelete//எவருமிலாததாய்
அறியப்படும் பொழுதுகளில்
நிறைய இருக்கிறேன் நான்..
யாவுமாய் இருக்கிறதோர் கவிதை//
மிகவும் ரசித்தவரிகள்! வாழ்த்துகள் சகோதரி!
நல்ல வார்த்தை கோர்வை!
ReplyDeleteவலைசரம் மூலம் நீங்கள் அறிமுகம் ................வார்த்தைகளில் வயலின் வாசிக்க முடியும் என்று இப்போது உங்கள் எழுத்களின் மூலம் உணர்கிறேன் .............அற்புதம் .........வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல சொற்கட்டுகளுடன் அர்த்தபுஷ்டியான கவிதையாக உள்ளது வியக்கிறேன். வலைச்சரமூலம் வந்தேன். கவிதை எனக்கும் உயிர். மேலும் வருவேன். நல்வாழ்த்து. ( எனது கவிதைகளையும் வந்து பார்க்கவும். வியூ மை கொம்பிலீட் புறொபைல் என்றால் ஒன்றையும் காணோமே. எப்படி ஒருவரைப்பற்றி அறிவது சகோதரி.)
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
எவருமிலாததாய்
ReplyDeleteஅறியப்படும் பொழுதுகளில்
நிறைய இருக்கிறேன் நான்..
யாவுமாய் இருக்கிறதோர் கவிதை
எவருமில்லாததாய் அறியப்படும் பொழுதுகளில் .நிறைய இருக்கிறேன் நான் ..எண்ணி எண்ணி வியக்கிறேன் இந்த வரிகளை ....சொல் தேர்வு மிக மிக அருமை