26 December, 2009

இரட்சிப்பு


விடுமுறை மதியமொன்று
விரிந்திருந்தது
தொலைக்காட்சியின் முன்..
அருகில் படம் வரையும் மகளுடன்
அவ்வப்போது கதைத்தபடி..

முனை மழுங்கிய
முக்கோணக் குன்றுகள்
இரண்டினுள் ஒன்றில்
இருந்தது நதிமூலம்...
நெளிந்திறங்கிய இணைகோடுகள்
நீள் நதியென அடிவாரத்தில்..
குழிந்த கோடொன்றைப்
படகெனச் செலுத்தினான்
வட்டத் தலையின் கீழ்
குச்சிக்கைகள் கொண்டவன்..
இலை போன்ற ஏதோவொன்று
முன்புறத்தில் கண் மற்றும்
முக்கோண வால் கொண்டு
மீனெனப் பட்டது..
வாலிணைந்த வளைகோடுகள்
வானளந்தன இரண்டிரண்டாய்
சென்டிமீட்டர் சுற்றளவுச் சூரியனருகில்..

தடாகமீன் கவ்விச் சென்றது
தாழப்பறந்த நாரையொன்று..
தொலைக்காட்சியினின்று விழி மீள்கையில்
மில்லிமீட்டர் சிறகுப் பறவைகள்
அவசரமாய் அழிக்கப்பட்டிருந்தன
அழிப்பான் அல்லது உமிழ்நீர் கொண்டு.

19 comments:

  1. நன்றாக இருக்கிறது....

    ReplyDelete
  2. // தடாகமீன் கவ்விச் சென்றது
    தாழப்பறந்த நாரையொன்று..
    தொலைக்காட்சியினின்று விழி மீள்கையில்
    மில்லிமீட்டர் சிறகுப் பறவைகள்
    அவசரமாய் அழிக்கப்பட்டிருந்தன
    அழிப்பான் அல்லது உமிழ்நீர் கொண்டு. //

    very very nice kavithai.............. :-)))

    ReplyDelete
  3. நன்றாக இருக்கிறது

    மில்லி மீட்டர் சிறகுப் பறவைகள்

    ReplyDelete
  4. oru doubt Gowri add panniyirukura picture paarthutu kavithai eluthuneenkalaa // kavithai eluthitu intha padam varanjinkalaa... :-)

    ReplyDelete
  5. அழகான கவிதை

    ReplyDelete
  6. பொருத்தமான படம்..
    படிக்கையில் மகிழவைக்கும் கவிதை.. :-))

    ReplyDelete
  7. colors again!! dis time paintd :)

    ReplyDelete
  8. எப்பவும் போலவே வித்யாசமாவே இருக்கு...

    ReplyDelete
  9. தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
    பதிவுலகதிற்கும்!!
    கீழிருக்கும் இலவச சேவை இந்தப் புத்தாண்டு முதல் தமிழ் கோரும் நல்லுலகத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது
    http://sites.google.com/site/tamilezhuthaani

    ReplyDelete
  10. அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துகள்..

    ReplyDelete
  12. இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துகள்..
    kindly visit my blog

    ReplyDelete
  13. அழகு கௌரி!

    கடைசி வரி தொடங்குகிறது மற்றொரு கவிதை.

    hats off!

    ReplyDelete
  14. //தடாகமீன் கவ்விச் சென்றது
    தாழப்பறந்த நாரையொன்று..
    தொலைக்காட்சியினின்று விழி மீள்கையில்
    மில்லிமீட்டர் சிறகுப் பறவைகள்
    அவசரமாய் அழிக்கப்பட்டிருந்தன
    அழிப்பான் அல்லது உமிழ்நீர் கொண்டு.//

    :)). அழகு என்பதை விடவும் சற்றே உயரமானது.

    ReplyDelete
  15. (சென்டிமீட்டர் சுற்றளவுச் சூரியனருகில்..
    மில்லிமீட்டர் சிறகுப் பறவைகள்)
    கவிதையின் அழகு கூடுகிறது டன் கணக்கில்...

    ReplyDelete