உணவு இடைவேளையில்
ஒன்றாய்ச் சாப்பிடுகையில்
மஞ்சளாடைச் சிறுமியின் கிண்ணத்து
மஞ்சளாடைச் சிறுமியின் கிண்ணத்து
மாதுளை முத்துக்களும்
சிவப்பு ஆடை அணிந்தவளின்
சோளக்கதிர் முத்துக்களும்
உருவம் ஒத்திருப்பதாய்த்
தமக்குள் பேசிக்கொண்டனர்..
அருகிலிருக்கும் அம்மாக்களின்
அனுமதி பெற்று
இடம் மாற்றிக் கொண்டனர்
கிண்ணங்களை.
எவரையும் கேட்காமல்
இடம் மாறிக் கொண்டன
அம்மாக்களின் புன்னகைகள்.
\\எவரையும் கேட்காமல்
ReplyDeleteஇடம் மாறிக் கொண்டன
அம்மாக்களின் புன்னகைகள். \\
இப்படி இடையிடையே புன்னகைத்துக் கொள்ள இடையறாத அலைவு மிகுந்த இவ்வாழ்வில் சிறுசிறு தருணங்கள் வாய்ப்பது எவ்வளவு இனிமையானது.
கவிதையிலிருந்து இடமாறி என்னுள் வந்தமர்கிறது ஒரு புன்னகை.. :-))
ReplyDeleteதொடருங்கள்.
ReplyDeleteமாதுளை முத்துகள் போலவே சத்தான அழகான கவிதை
ReplyDeleteரொம்ப நல்ல கவிதை இது கௌரி.
ReplyDeleteமிகச்சிறந்த கவிதை. வாழ்த்துகள்
ReplyDeleteயாத்ரா, பா.ராஜாராம், நிலாரசிகன்...உங்கள் முதல் வருகைக்கும் கருத்துகட்கும் நன்றி..
ReplyDeleteராகவ், அப்துல்லா, லாவண்யா.. மிக்க நன்றி
மிக மிக அழகு. மிகவும் பிடித்தது
ReplyDelete:) நல்ல கவிதைங்க.
ReplyDelete