வழியோரத்து நீர்நிலைகளில்
வண்ணங்குழைத்தபடியோ
தொலைவிருக்கும் பனைகளின்
தலை யுரசியபடியோ
நீலத்தினூடே செவ்விழைகளை
நெய்து திரிந்தபடியோ
தொடர்வண்டிப் பயணங்களில்
துவளாது உடன்வந்தும்..
நிலவுடன் ஒப்பிடுகையில்
கதிரவன் என் கவிதைகட்கு
அந்நியந்தான்..
பயணத்தில் ஜனிக்கும் இவ்விடியலில்
அருகருகிலிருக்கும் இரு முகில்களில்
ஒன்றைத் தனதென்றும்
மற்றொன்றை யெனதென்றும்
மழலைப் பிரகடனம் செய்கிறாள்
எதிர் இருக்கைச் சிறுமி..
ஒட்டியவை போலிருக்கும்
பிஸ்கட்டுகளைப் பிரித்து
இடையிருக்கும் செம்மஞ்சள்
வட்டத்தை விழுங்கிப் பின்
சிரித்தபடி செப்புகிறாள்
சூரியனை விழுங்கியதாய்..
எமதிரு முகில்களிடை
இயல்பாய் ஒட்டிக்கொண்ட
சூரியனைப் பிரித்தெடுத்து
விழுங்கத் தொடங்குகிறதொரு
கவிதை.
நன்றி- உயிரோசை
//ஒட்டியவை போலிருக்கும்
ReplyDeleteபிஸ்கட்டுகளைப் பிரித்து
இடையிருக்கும் செம்மஞ்சள்
வட்டத்தை விழுங்கிப் பின் //
அழகு.. :-))
அருமை!
ReplyDelete//எமதிரு முகில்களிடை
ReplyDeleteஇயல்பாய் ஒட்டிக்கொண்ட
சூரியனைப் பிரித்தெடுத்து
விழுங்கத் தொடங்குகிறதொரு
கவிதை.//
அருமை
ஒட்டியவை போலிருக்கும்
ReplyDeleteபிஸ்கட்டுகளைப் பிரித்து
இடையிருக்கும் செம்மஞ்சள்
வட்டத்தை விழுங்கிப் பின்
Excellent !!!!
SUPERA IRUKU..!!
ReplyDeleteவாவ்!
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி :)
ReplyDeleteThirumba elutha arambichuteengala...super...romba naala (online)padikkurathaye vittutu ippo than thriumba arambichuten... SUPER POEM GOWRY..!!!
ReplyDelete”விழுங்கிப் பின்
ReplyDeleteசிரித்தபடி செப்புகிறாள்
சூரியனை விழுங்கியதாய்..”
ரியல்லி சூபர்ப்... தொடரட்டும்...
ரொம்ப பிடிச்சிருக்கு..வெல்கம் பேக் :-)
ReplyDeleteHello Eppo adutha Post poduveenga..Adikkadi Refresh panni parthutte iruken... :-(
ReplyDeleteungalukkenra adayaalangaludan alagaana kavidhai...
ReplyDeleteரொம்ப நல்லாயிருக்கு
ReplyDelete//ஒட்டியவை போலிருக்கும்
ReplyDeleteபிஸ்கட்டுகளைப் பிரித்து
இடையிருக்கும் செம்மஞ்சள்
வட்டத்தை விழுங்கிப் பின்
சிரித்தபடி செப்புகிறாள்
//
அழகு
வட்டத்தை விழுங்கிப் பின்
ReplyDeleteசிரித்தபடி செப்புகிறாள்
சூரியனை விழுங்கியதாய்..
*எமதிரு முகில்களிடை
இயல்பாய் ஒட்டிக்கொண்ட
சூரியனைப் பிரித்தெடுத்து
விழுங்கத் தொடங்குகிறதொரு
கவிதை.
அருமை
ரொம்ப நல்லாருக்குங்க..
ReplyDelete