23 May, 2019

சிறுமாயம்






மினுங்கும் இளஞ்சிவப்பில்
மென்தகடுகள் தைத்த
தேவதையின் ஆடையைச்
சன்னல் வழியேகித் தழுவும்
சிதறும் பேரண்டத்தின்
சின்னஞ்சிறு கற்றைக் கதிர்.

எதிரொளிக்கும்
சுவரெங்கும் சுழன்றொளிரும்
குங்குமப்பூ குழைத்த
குட்டிப் பால்வீதி.

1 comment:

  1. குழந்தைகளே நம் கவிதைகள் என்றானபின்
    கவிதைகளும் குழந்தைகள் போல்
    அபூர்வமாய் ஆகிவிடுகின்றன

    ReplyDelete