10 January, 2015

கடல் சாரா நெய்தல் 2

வியர்த்தபடி மீன் வாட்டும்
நுண்ணலை அடுப்பு..

இறுகும் புரதம்...
உருகும் கொழுப்பு....
வாய் முதல் வால் வரை
அப்பிய மரணம்...


உருண்டு சிதறும்
ஒளி மடக்கி உரு வளைத்த
உள்விழிக் குவியாடி...

ஆகப் பெருவிட்டக் கோலியென
அறையெங்கும் அலையும்
பசுநீலக் கடல்..

4 comments:

  1. கடல் சாரா நெய்தல் 1 ன் ஆழத்தை இதில் உணர முடியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. என்னாலும்...
      நன்றி ராம்கி

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. என்னாலும்...
      நன்றி ராம்கி

      Delete