
நிறமிகள் கலந்திடாத பொழுதுகளில்
எதிர்ப்படும் யாவுமாய்
இருக்கிறது நீர்..படர்ந்து நீங்கும்
பகல்களுக்கிடையில்
எப்போதும் எங்கேனும் இருக்கிறது இரவு
இருண்டு விரியும்
அண்டத்தின் துண்டமென..
எவருமிலாததாய்
அறியப்படும் பொழுதுகளில்
நிறைய இருக்கிறேன் நான்..
யாவுமாய் இருக்கிறதோர் கவிதை