22 January, 2011

உடையும் பறவைகள்

நுரையீரல்களில் நூறாயிரமும்
முகத்தில் ஒன்றுமெனப்
பூக்கள் குவித்தவற்றை
விடுவிக்கிறாள் சிறுமி...
குப்பிச் சிறை விடுத்துக்
குறுவளையம் கடந்து
காற்றேகி உடைகின்றன
உருண்ட பறவைகள்.

அறையோரக் குவளையுள்
ஓயாமல் மௌனம் உமிழும்
ஒற்றைமீனின் இதழ் நீங்கி
நிச்சலன நீர்ப்பரப்பை
மிக மெலிதாய் அசைத்துடைகின்றன
சற்றே சிறிய உருண்ட பறவைகள்.

மீனிருக்கும் அறை நுழைந்து
பாழ்மௌனப் பட்சிகள்
உடைந்துலவும் காற்றில்
பேருவகைப் பறவைகளைப்
பறக்கப் பணிக்கிறாள் சிறுமி.

அவளுடன் அறை எய்தும் கவிதையொன்றில்
மீன்கள் நடக்கவும்
சிறுமிகள் பறக்கவும்
பறவைகள் நீந்தவும்
தொடங்குகின்றன.

13 comments:

  1. அவளுடன் அறையெத்தும் கவிதையொன்றில்
    மீன்கள் நடக்கவும்
    சிறுமிகள் பறக்கவும்
    பறவைகள் நீந்தவும்
    தொடங்குகின்றன.

    superb gowri!

    ReplyDelete
  2. நல்லா இருக்கு :)

    ReplyDelete
  3. மீன்கள் நடக்க... சிறுமிகள் பறக்க... பறவைகள் நீந்த... கவிதை கொஞ்சுகிறது மீன்தோல் போர்த்திய மழலைபோல்... அறையெத்தும்???

    ReplyDelete
  4. ரொம்ப அருமையான வரிகள்...
    கடைசிப் பத்தி கலக்கல்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. @Raja
    typing error..
    மாற்றி இருக்கிறேன்.. நன்றி

    ReplyDelete
  6. கவிதை நன்றாக இருக்கின்றது

    ReplyDelete
  7. கவிதை நன்றாக இருக்கின்றது


    நேரமிருந்தால் வாருங்கள் என் வலைப்பதிவுக்கு
    www.kalanchiyem.blogspot.com
    சந்தக்கவி.சூசைபாண்டி.

    ReplyDelete
  8. நீர்க்குமிழி பறவை.
    நீச்சலிடும் கலர் மீன்
    சோப்புநுரை தேர்கள்
    சொக்க வைக்கும் கவிதை
    சிறுமியோடு பறந்து
    செல்லுது என் மனது.

    ReplyDelete