நுரையீரல்களில் நூறாயிரமும்
முகத்தில் ஒன்றுமெனப்
பூக்கள் குவித்தவற்றை
விடுவிக்கிறாள் சிறுமி...
குப்பிச் சிறை விடுத்துக்
குறுவளையம் கடந்து
காற்றேகி உடைகின்றன
உருண்ட பறவைகள்.
அறையோரக் குவளையுள்
ஓயாமல் மௌனம் உமிழும்
ஒற்றைமீனின் இதழ் நீங்கி
நிச்சலன நீர்ப்பரப்பை
மிக மெலிதாய் அசைத்துடைகின்றன
சற்றே சிறிய உருண்ட பறவைகள்.
மீனிருக்கும் அறை நுழைந்து
பாழ்மௌனப் பட்சிகள்
உடைந்துலவும் காற்றில்
பேருவகைப் பறவைகளைப்
பறக்கப் பணிக்கிறாள் சிறுமி.
அவளுடன் அறை எய்தும் கவிதையொன்றில்
மீன்கள் நடக்கவும்
சிறுமிகள் பறக்கவும்
பறவைகள் நீந்தவும்
தொடங்குகின்றன.
அவளுடன் அறையெத்தும் கவிதையொன்றில்
ReplyDeleteமீன்கள் நடக்கவும்
சிறுமிகள் பறக்கவும்
பறவைகள் நீந்தவும்
தொடங்குகின்றன.
superb gowri!
நல்லா இருக்கு :)
ReplyDeleteமீன்கள் நடக்க... சிறுமிகள் பறக்க... பறவைகள் நீந்த... கவிதை கொஞ்சுகிறது மீன்தோல் போர்த்திய மழலைபோல்... அறையெத்தும்???
ReplyDeleteரொம்ப அருமையான வரிகள்...
ReplyDeleteகடைசிப் பத்தி கலக்கல்...
வாழ்த்துக்கள்.
@Raja
ReplyDeletetyping error..
மாற்றி இருக்கிறேன்.. நன்றி
கவிதை நன்றாக இருக்கின்றது
ReplyDeleteநன்றி
Deleteகவிதை நன்றாக இருக்கின்றது
ReplyDeleteநேரமிருந்தால் வாருங்கள் என் வலைப்பதிவுக்கு
www.kalanchiyem.blogspot.com
சந்தக்கவி.சூசைபாண்டி.
நன்றி
Deleteநீர்க்குமிழி பறவை.
ReplyDeleteநீச்சலிடும் கலர் மீன்
சோப்புநுரை தேர்கள்
சொக்க வைக்கும் கவிதை
சிறுமியோடு பறந்து
செல்லுது என் மனது.
நன்றி
Deletewow wow...nalla iruckunga
ReplyDeleteநன்றி
Delete