22 January, 2011

பொதுமைய வட்டங்கள்

மெதுமெதுவாய்
மிக உன்னிப்பாய்
ஒன்றினுள் மற்றொன்றாய்
உடைந்த வட்டங்களுக்குள்
சின்னஞ்சிறு பந்துகளைச்
செலுத்தி விளையாடும்
அற்புதத் தருணங்களில்
எவர் அழைத்தாலும்
எளிதில் கலைவதில்லை அவள்.....

திடுமெனத் தெருநோக்கி
விரைபவளைத் தொடர்கிறேன்..
சில ஆயிரம் பந்துகளைத்
தேங்கிய நீரிலெறிந்து
அதிவிரைவாய்
மிக எளிதாய்
ஒன்றைச் சுற்றி மற்றொன்றாய்
சில லட்சம் வட்டங்கள் வரைந்து
இம்முறை அவளை
அழைத்திருப்பது மழை.

5 comments:

  1. சிலிர்ப்பான வார்த்தைகள், மழை போலவே...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. malai amaiththa puthiya vilaiyaatil maiyaththil seluththa panthethumillai, pathilaai thane panthaki malai maiyamadaivaal achchirumi. arumai gowri.

    ReplyDelete
  3. realy i enjoyed reading your poems. I dint see yours for long..amazing amazing

    ReplyDelete
  4. கவிதைகளில் ‘காதலுக்கு’ அடுத்த இடத்தை பிடித்துக்கொண்டிருப்பது ‘மழை’.

    இந்த உடையும் வட்டங்களில் சிக்கிக்கொண்டது கவிதையின் பின் ஓடும் என் மனது.

    ReplyDelete