சன்னலின் மேல்விளிம்பில்
விழி பொருத்தி
கீழும் மேலும்
மேலும் கீழுமாய்த்
தலையசைக்கிறேன்..
வீட்டிற்குள் வந்து வந்து போகிறது
சற்றுமுன் உதித்திருக்கும் நிலா.
**
மீண்டும் மீண்டும்
ஒருவிழி மூடி மற்றதைத் திறந்தும்
முன்னதைத் திறக்கையில்
மற்றதை அடைத்தும்
வான்பார்த்துக் கிடக்கிறேன்..
ஒன்றுமிலாப் பெருவெளியின்
உருவிலிக் கயிறு பிடித்து
பேரொளிப் பெண்டுலமாய்
எனக்கென ஆடுகிறது
நிலா.
*
வெகு அழகாய் இருக்கு கௌரி கவிதையும், நிலாவும், நிலாவோடு உங்கள் விளையாட்டும்... :)எனக்கும் இந்த மாதிரியான ஒரு கண் மூடி மறு கண் திறந்து விளையாட்டுக்கள் ரொம்ப பிடிக்கும்...
ReplyDelete// உருவிலிக் கயிறு பிடித்து
ReplyDeleteபேரொளிப் பெண்டுலமாய் //
//வான்பார்த்துக் கிடக்கிறேன் //
வாழ்த்துக்கள்....
கிடந்து கிடந்து...கடந்து கடந்து ... ஒன்ருமிலாமலாகி...பெருவெளியாய்...
//உருவிலிக் கயிறு பிடித்து
ReplyDeleteபேரொளிப் பெண்டுலமாய் //
நல்லா இருக்கு கௌரி
nice!
ReplyDeleteஒன்றுமிலாப் பெருவெளியின்
ReplyDeleteஉருவிலிக் கயிறு பிடித்து
பேரொளிப் பெண்டுலமாய்
எனக்கென ஆடுகிறது
நிலா./
ரொம்ப நல்லா இருக்கு :)
உங்களோட பெஸ்ட் !
ReplyDeleteபால்யம் மீதமிருக்கும் மனது உலகை தனதாய் பார்க்க விழையும் வளைப்பை சொல்லுக்கு கடத்தி.. நன்றாய் இருக்கிறது என்பது குறைவான சொல்.க்ராப்ட்-மெட்டபோர் - எக்செண்ட்ரிக் ட்ராவல் .
@ sugirtha..
ReplyDeleteRaja..
லாவண்யா அக்கா..
கோநா..
ஆறுமுகம்..
நேசமித்திரன் சார்..
ஒவ்வொருவருக்கும் நிறைய நன்றிகள் :))
உருவிலிக் கயிறு பிடித்து
ReplyDeleteபேரொளிப் பெண்டுலமாய்
எனக்கென ஆடுகிறது
///
அறிவியலும் கலந்து
அழகான கவிதை எழுதிய நிலா கவிதை
நன்றாக இருக்கு தோழி
அண்டம் அழகு, அகிலம் அழகு நிலா அழகு உங்கள் கவிதை அழகு , உருவகம் அழகு ரசிப்பும் அழகு. பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி
Deletesuper super
ReplyDeleteநன்றி
Deleteமுதல் பத்தியில் ஒரு குழந்தையை எழுத வைத்த நிலா இரண்டாவது பத்தியில் ஒரு பெண்ணை எழுத வைத்திருக்கிறது.
ReplyDeleteநிலாவின் உன்மத்தம் கவிதையில் பிறந்து கவிதையில் வடிந்து கவிதையிலேயே முடிகிறது.
ரசனைக்குரியது கௌரிப்ரியா இந்தக் கவிதையின் மொழி.
நன்றி
Deleteரொம்ப நல்லா இருக்கு.
ReplyDeleteநன்றி
Deleteperolip pendulam new thouht varnanai
ReplyDeletethank you :)
Delete