பருத்தியல்லாத ஒன்றைப்
பருத்தியெனச் சொல்லிவிட்ட
நடைபாதை வணிகனை
ஏசாமல்தான் விடுங்களேன்..
எதிர்ப்புகளேதும் தெரிவிக்காத
எளியவன் அவன்..
பருத்தியெனச் சொல்லிவிட்ட
நடைபாதை வணிகனை
ஏசாமல்தான் விடுங்களேன்..
எதிர்ப்புகளேதும் தெரிவிக்காத
எளியவன் அவன்..
சற்றேனும் மென்மையற்ற
உயிர்த்தலும் உதிர்தலுமற்ற
இலையல்லாத இலைகளை
எந்நேரமும் முட்டியலையும்
உங்கள் செல்ல மீன்குஞ்சினைப் போலவே
மிக எளியவனவன்.
ரொம்ப நல்லாருக்கு கௌரி!
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு.
ReplyDeleteNice... Excellent
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு கௌரி
ReplyDeleteகவிதைக்கு அழகு எளிமைதான். எளிமைக்குள் ஜென் கருத்து இழையோடுகிறது. மீன்குஞ்சைப் போல எளிமையானவன் என்று சொல்லும்போதே மென்மையற்ற உதிர்தலற்ற இலைகளை எனும்போது கவிதை தனித்துவம் பெறுகிறது. அருமை.
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு.
ReplyDeleteஆஹா!
ReplyDeleteமன்னிப்புகள் எல்லோருக்கும் அவசியம்தான் கௌரி, இரண்டாவது சான்ஸ் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை, எனவே மன்னிப்பாவது... நல்ல கருத்தை கவிதை முன் வைக்கிறது...
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு கெளரி
ReplyDeleteநன்றி
ஜேகே
//சற்றேனும் மென்மையற்ற
ReplyDeleteஉயிர்த்தலும் உதிர்தலுமற்ற
இலையல்லாத இலைகளை //
மிக ரசித்தேன்...
முதல் வரி
ReplyDelete//செயற்கைஇழை ஆடை ஒன்றை//
என்று இருந்திருக்கலாமோ?
நல்ல கவிதை...
அனைவருக்கும் நன்றி..
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகமான தங்கள் கவிதை
ReplyDeleteபடித்தேன் மிகவும் அருமையாக உள்ளது மேலும்
தொடர வாழ்த்துக்கள் தோழி .
This comment has been removed by a blog administrator.
ReplyDelete