வன்மழைக்குச் சாய்ந்திருந்தது
வழியோரத்து மரம்
இறுதிச் சருகையும் நீத்து..
காலுடைந்த காற்றாடியுடன்
கிளைநுனி பிணைத்தவன்
சில்லென்ற காற்றெங்கும்
சிந்தியபடி சென்றான்
சின்னஞ்சிறு புனைவுகளை...
அன்றைய கனவில்
பூத்துச் சுழன்றது மரம்
கரும்பச்சை, மஞ்சள் மற்றும்
வாடாமல்லி நிறங்களில்.
கவிதை அழகு.. :-))
ReplyDeleteதூறல்வெளி.. :)
ReplyDeletebeautiful one.. :)
ReplyDeleteகிளையொன்றிலிருந்த கூட்டில்
ReplyDeleteஇன்னும் சில பிறைத்தலுக்கு
காத்திருந்த முட்டைகள் சிவந்த வேர்களுடன்
டார் சாலை கருமையில் மஞ்சள் குமிழ்
படர்த்தி
என்று தொடர தோன்றுகிறது
நல்ல கவிதை :)
நல்ல கவிதை வாழ்த்துகள்
ReplyDeleteகுளிர்ந்த சொற்க்களின் வறட்சி...
ReplyDeleteநன்றாக இருந்தது...
இன்னும் ஏக்கத்தை மிகைபடுத்தி இருக்கலாம்...
மிக நல்ல கவிதை அடர்த்தியான எழுத்து...மீண்டும் மீண்டும் படிக்க சொல்கிறது...வாழ்த்துக்கள் தொடருங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் மிக்க நன்றி
ReplyDelete