12 January, 2010

சிறகின் மேல் பறத்தல்


பரணில் கூடமைக்கும்
பறவையின் சிறகு தொற்றி
படுக்கையறை நுழையும்
பள்ளிக்கூட மதிலோரத்து
இலவின் நினைவு போல்..

கண்ணாடிச் சன்னல் வழி
கடினமின்றி நுழைகிறான்
வண்ணத்துப்பூச்சி துரத்துகையில்
நட்பாகி
வளர்ந்தபின் கடலாடி மரித்தவன்..

அளவிலிச் சிறகசைத்து
அலையும் வண்ணத்துப்பூச்சியென
விரிந்தபடி யிருக்கிறது
விமானத்தின் கீழ் கடல்.


உரையாடல் கவிதைப் போட்டிக்கு.

24 comments:

  1. வெற்றிக்கு வாழ்த்துக்கள்... (பொங்கலுக்கும்தான்)

    ReplyDelete
  2. //அளவிலிச் சிறகசைத்து
    அலையும் வண்ணத்துப்பூச்சியென
    விரிந்தபடி யிருக்கிறது
    விமானத்தின் கீழ் கடல்.// அழகு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  6. அற்புதமாய் இருக்கு ப்ரியா!

    வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அடடா.. !!

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  8. அழகான கவிதை
    வெற்றிபெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. நல்ல கவிதை வண்ணத்துப்பூச்சியை வித்தியாசமாக எழுதியமைக்கு. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அண்ணாமலையான்
    எம்.எம்.அப்துல்லா
    நிலாரசிகன்
    Sangkavi
    இராவணன்
    பா.ராஜாராம்
    ஆறுமுகம் முருகேசன்
    உயிரோடை
    அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

    Karthik
    வெ.இராதாகிருஷ்ணன்
    சக்தியின் மனம்
    திகழ்
    கமலேஷ்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் மகிழ்ச்சியும் நன்றிகளும்

    ReplyDelete
  11. 'என்றேனும் ‘ கவிதையை வலையில் ஏன் காணவில்லை? கற்பனை காற்றில் அபாரமாக சிறகு விரித்த, வியக்க வைத்த , கவித்துவமான கவிதை.எதுவும் இதழுக்கு அனுப்பியிருக்கிறீர்களோ? அதற்காக எடுத்திருக்கிறீர்களோ?

    ReplyDelete
  12. @ச.முத்துவேல்
    கொஞ்சம் திருத்தங்கள் செய்ய வேண்டி காத்திருந்தேன் :)
    இப்போது போட்டுவிட்டேன்.. நன்றி :)

    ReplyDelete
  13. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

    அன்புடன்
    உழவன்

    ReplyDelete
  14. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் கௌரிப்ரியா! :-)

    ReplyDelete
  15. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் கௌரிப்ரியா!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் கெளரிபிரியா.
    :)

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  18. கவிதையும் அழகு.. வாழ்த்துகள் :)

    ReplyDelete
  19. வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete