ஆயிரங்கோடி
அரூபச் சிறகு கொண்டு
திசைகள் யாவிலும்
திரிகிறது காற்று..
இங்கு
உலோக அதிர்வுணர்ந்து
குகைவாயிலில் குழுமியுள்ளனர்
குழந்தைகள் சிலர்..
அங்கு
மென்கூட்டின் அசைவுகளை
அவதானித்துக் கிடக்கிறான்
புகைப்படக் கலைஞனொருவன்..
எந்நொடியிலும் வெளிப்படலாம்
இருள் கிழித்து
இங்கொரு இரயிலும்..
இழைகள் உடைத்து
அங்கொரு வண்ணத்துப்பூச்சியும்..
முடிவற்ற பயணத்தின்
முதலசைவுக்கென
மௌனமாய்க் காத்திருக்கும்
காற்றினிரு சிறகுகள்
எந்நொடியிலும் எழும்பலாம்
இங்கிருந்தும் அங்கிருந்தும்..
என்றேனுமவை சந்திக்கக் கூடும்
வளிமண்டலத்தின் ஏதோவோர் அடுக்கில்..
வாய்ப்பிருந்தால் ஒரு கவிதையில்.
அரூபச் சிறகு கொண்டு
திசைகள் யாவிலும்
திரிகிறது காற்று..
இங்கு
உலோக அதிர்வுணர்ந்து
குகைவாயிலில் குழுமியுள்ளனர்
குழந்தைகள் சிலர்..
அங்கு
மென்கூட்டின் அசைவுகளை
அவதானித்துக் கிடக்கிறான்
புகைப்படக் கலைஞனொருவன்..
எந்நொடியிலும் வெளிப்படலாம்
இருள் கிழித்து
இங்கொரு இரயிலும்..
இழைகள் உடைத்து
அங்கொரு வண்ணத்துப்பூச்சியும்..
முடிவற்ற பயணத்தின்
முதலசைவுக்கென
மௌனமாய்க் காத்திருக்கும்
காற்றினிரு சிறகுகள்
எந்நொடியிலும் எழும்பலாம்
இங்கிருந்தும் அங்கிருந்தும்..
என்றேனுமவை சந்திக்கக் கூடும்
வளிமண்டலத்தின் ஏதோவோர் அடுக்கில்..
வாய்ப்பிருந்தால் ஒரு கவிதையில்.
ஆயிரங்கோடி
ReplyDeleteஅரூபச் சிறகுகளை
உலகெங்கும் உதிர்த்தலைகிறது
காற்று...
இங்கு..
உலோக அதிர்வுணர்ந்து
குகைவாயிலில் குழுமியுள்ளனர்
குழந்தைகள் சிலர்..
நல்லா இருக்குங்க
//எந்நொடியிலும் வெளிப்படலாம்
ReplyDeleteஇருள் கிழித்து
இங்கொரு இரயிலும்..
இழைகள் உடைத்து
அங்கொரு வண்ணத்துப்பூச்சியும்..//
அழகான வரிகள்...
முடிவற்ற பயணத்தின்
ReplyDeleteமுதலசைவுக்கென
மௌனமாய்க் காத்திருக்கும்
காற்றினிரு சிறகுகள்
எந்நொடியிலும் எழும்பலாம்
இங்கிருந்தும் அங்கிருந்தும்
அழகான வரிகள்
கவிதை மிக அருமை. மொழியும் இறுக்கம் கூட இருக்கு. இதை எதாவது இலக்கிய பத்திரிக்கைக்கு அனுப்பலாமே கௌரி. மடலில் முகவரி அனுப்பி வைக்கிறேன்.
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு..
ReplyDeleteநல்லதொரு கவிதை.
ReplyDeleteமுதல் வாசிப்பில் புரியவில்லை!
//முடிவற்ற பயணத்தின்
ReplyDeleteமுதலசைவுக்கென //
eppudi ippadiellam..?
மிக மிக அருமையான கவிதை...நன்றா இருக்கிறது...வாழ்த்துக்கள்..தொடருங்கள்
ReplyDeleteமிகச்சிறப்பான கவிதை. நல்ல மொழி.வாழ்த்துகள் ப்ரியா.
ReplyDeleteகௌரி,
ReplyDeleteமிக அலாதியான இடத்திற்கு எடுத்து என்றது இந்த கவிதை.சகோ லாவண்யா சொல்வது போல்,அகநாழிகை,காலச்சவடு,உயிர்மை,அனுப்பவும்.எல்லோருக்கும் போய் சேரட்டும் இந்த இந்த வாசிப்பனுபவம்.
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் :)))
ReplyDelete[konjam late ] அருமையான கவிதை கௌரி.. :)
ReplyDeleteகலக்கிட்டீங்க...பின்னிட்டீங்க... அடுத்த கவிதைக்காக காத்திருக்கிறேன்...உங்க ஆட்டோகிராஃப் ஸ்கேன் பண்ணி என்னோட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியுமா...rmani0606@gmail.com
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க
ReplyDeleteமண்குதிரை
அனைவருக்கும் மிக்க நன்றி
ReplyDelete