05 January, 2010

கிளை பற்றும் அணில் குஞ்சு


மார்கழி முன்னிரவில்
பனியொழுகும் தலைகளுடன்
படர்ந்திருக்கின்றனர் மக்கள்
கண்காட்சி யொன்றில்..
ஏந்தியவன் கழுத்தின்
இருமருங்கிலும் கால்களிட்டு
தோளமர்ந்திருக்கிறது குழந்தை.....
தந்தையின் கற்றைமுடியை
இறுகப் பிடித்திருக்கும் உள்ளங்கை
காற்றிலாடும் செடியொன்றின்
கிளை பற்றிய அணில்குஞ்சென
மிருதுவாய் இருக்கக்கூடும்...

கவியொழுகும் தலையுடன்
கடந்து செல்கிறான்
கூட்டத்தில் அத்தகப்பன் மட்டும்.






19 comments:

  1. //இருமருங்கிலும் கால்களிட்டு
    தோளமர்ந்திருக்கிறது குழந்தை.....
    தந்தையின் கற்றைமுடி
    இறுகப் பிடித்திருக்கும் உள்ளங்கை
    காற்றிலாடும் செடியொன்றின்
    கிளை பற்றிய அணில்குஞ்சென
    மிருதுவாய் இருக்கக்கூடும்//

    ரொம்ப பிடிச்சிருந்ததுங்க முடியைப் பிடிச்ச விதம் சொன்னது

    ReplyDelete
  2. //கவியொழுகும் தலையுடன்
    கடந்து செல்கிறான்
    கூட்டத்தில் அத்தகப்பன் மட்டும். //

    அழகான வரிகள்...

    ReplyDelete
  3. அருமையான கவிதை..காட்சி கண்முன்னே விரிகிறது.

    ReplyDelete
  4. //கிளை பற்றிய அணில்குஞ்சென
    மிருதுவாய் இருக்கக்கூடும்..//

    அழகு.. :-))

    ReplyDelete
  5. நன்றாக உளது உங்கள் கவிதை இன்னும் எழுதுங்கள்

    ReplyDelete
  6. அழகு, ரொம்ப ரசித்தேன்.

    ReplyDelete
  7. வேகம் போ என்னும் குறிப்புணர்த்த காது திருகும்
    போது

    குளித்து துவட்டத் தராமல் வீடெங்கும் தீபச்சுடர் பெருவிரல் ஈரம் பதிது அலையும் நினைவுகளை மீளுரு செய்தது இந்த வரிகள்

    ReplyDelete
  8. சிகை பிடித்த
    சிருந்தளிரின்
    நகை பிடித்திருக்கிறது
    உங்கள் கவி நடை போலவே..

    ReplyDelete
  9. கிளை பற்றும் அணில் குஞ்சு ரொம்ப அழகு..:)

    ReplyDelete
  10. மென்மையான வரிகள்.அழகாக இருக்கிறது நிகழ்வை கண்முன் விரித்து...

    ReplyDelete
  11. //இறுகப் பிடித்திருக்கும் உள்ளங்கை
    காற்றிலாடும் செடியொன்றின்
    கிளை பற்றிய அணில்குஞ்சென//

    மிக அழகான பார்வை. வாழ்த்துகள்.
    முழுத்தொகுப்பும் விரைவில் வாசிக்கேறேன்.

    ReplyDelete
  12. ரொம்ப நல்ல கவிதை. ஒரு மென்னகையோடவே வாசிக்க முடிஞ்சுது. அழகு.

    ReplyDelete
  13. @நர்சிம்
    @Sangkavi
    @எம்.ரிஷான் ஷெரீப்
    @அண்ணாமலையான்
    @RaGhaV
    @கவிக்கிழவன்
    @அன்புடன் அருணா
    @யாத்ரா
    @நேசமித்ரன்
    @சந்தான சங்கர்
    @ஆறுமுகம் முருகேசன்
    @குடந்தை அன்புமணி
    அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

    @இராவணன்
    @சித்தார்த். வெ
    முதல் வருகைக்கு மகிழ்ச்சியும் நெஞ்சார்ந்த நன்றிகளும் :)

    ReplyDelete
  14. காற்றிலாடும் செடியொன்றின்
    கிளை பற்றிய அணில்குஞ்சென
    மிருதுவாய் இருக்கக்கூடும்...


    கவியொழுகும் தலையுடன்
    கடந்து செல்கிறான்
    கூட்டத்தில் அத்தகப்பன் மட்டும்

    மிக மிக மிக அழகாய் .......

    ReplyDelete
  15. கலக்குறீங்களே மக்கா..

    ரொம்ப சிநேகமான பார்வை!

    ReplyDelete
  16. //கவியொழுகும் தலையுடன்
    கடந்து செல்கிறான்
    கூட்டத்தில் அத்தகப்பன் மட்டும்...//

    இதைப் படித்த பின் என் கணிணித் திரையில் கூட கவியொழுகும்.!! :)

    ReplyDelete
  17. எனக்காகவும் குழலிக்காகவும் எழுதப்பட்ட கவிதை என அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன்.

    ReplyDelete