19 October, 2010

இறுதிச் சொல்

ஒன்றை மூன்றாக்கியது
உடம்பு சுடாத சிறுவெயில்.
கவிதையொன்று ஜனித்ததைக்
காகிதத்தில் குறித்தேன்..

இரண்டை வளைத்து
ஒன்றில் வசிக்க
இளமழை தொடங்கிய வேளையில்
ஈரமாய் முடியட்டுமென
இறுதிச்சொல் தேடினேன்..

வேறொன்றை ஏழாக்கி
வானில் கிடத்தின
வெயிலும் மழையும்.

11 comments:

  1. கொஞ்சம் புரியலைன்னாலும் நல்லாருக்கு படிக்க!

    ReplyDelete
  2. i visualize a colorful start in ths 'last word' !!

    ReplyDelete
  3. ஈரமாய் முடியட்டுமென
    இறுதிச்சொல் தேடினேன்..

    வேறொன்றை ஏழாக்கி
    வானில் கிடத்தின
    வெயிலும் மழையும்.

    அற்புதமான கவிதை .மனதை கிளறிச் செல்லும் வரிகள் ..அழகோ அழகு

    ReplyDelete
  4. கௌரி, முதல் பத்தியில் வெயில் உண்டாக்கிய இரண்டு நிழல்களையும், இரண்டாம் பத்தியில் வந்த இளமழையும், கருக்கல்களும் மீண்டும் உடலுக்குள்ளேயே ஒடுங்கி வசிக்கச் செய்ய, மூன்றாம் பத்தியில் வெயிலும் மழையும் சேர்ந்து வானில் உண்டாக்கிய வானவில் உங்கள் கவிதைக்கான கடைசி வார்த்தையாகியதோ? nice.

    ReplyDelete
  5. மிக மிக அழகு தெறிக்கும் கவிதை....

    ReplyDelete
  6. கொட்டி கிடக்கிறது கோபுரமாய்
    வார்த்தைகள் ....................

    எட்டி பார்கிறேன் கீழே நின்று கொண்டு.....

    அற்புதமான சொல் வடிவமைப்பு ..........

    ReplyDelete