21 December, 2010

அனுமதி

புத்தகப்பை முழுதும்
நண்டுகள் ஊர்வதான
கொடுங்கனவில் வியர்த்தெழுந்த வேளை..
நேசித்த மரமுதிர்த்த
நீள்வட்டச் சருகையும்
நண்பன் பரிசளித்த
வெண்பட்டு இறகையும்
உள்ளே அனுப்பும்படி
ஓயாமல் இரைந்திருந்தாள்
புற்றினுள் அடைந்திருந்த சிறுமி.
இறுதிவரை அனுமதிக்கவில்லை
கிருமிகள் வெறுப்பதாய்க் காரணங் கூறிப்பின்
தனிமையில் உடைந்தழுத காவலன்.

பின்பொருநாள்
கொடுங்காற்றில் அதிர்ந்தவொரு
கிளை பிரிந்த சருகையும்
சிலிர்த்தலறிய பறவையொன்றின்
செம்மஞ்சள் இறகையும்
மௌனமாய்ப் பிணைத்தது
முற்றிலும் கருக்காத
முகிலின் வீழ் துளி.
எவரையும் கேளாமல்
ஈரக்காற்றிறங்கி
இனியவை தழுவக்கூடும்
நீளத்தில் சிறியதந்த
அறுகோணப் பெட்டியை.



13 comments:

  1. //புத்தகப்பை முழுதும்
    நண்டுகள் ஊர்வதான
    கொடுங்கனவில் வியர்த்தெழுந்த வேளை..//

    வாவ் அருமையான ஆரம்பம், அடுத்த வரிகளும் அழகு. ஆனால் முதல் பத்திக்கும் இரண்டாம் பத்திக்கும் இடையில் ஒட்டுதலில்லை என்றே நினைக்கிறேன்.

    இரண்டாவது கவிதை மிகவும் நேர்த்தியாகவும் மிக நல்லதொரு மொழியிலும் இருக்கு. வாழ்த்துகள் கௌரி.

    ReplyDelete
  2. நன்றி லாவண்யா அக்கா.. கவிதையின் கட்டமைப்பில் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன்.. இடையில் இட்டிருக்கும் ***** இரு கவிதைகள் போன்ற தோற்றத்தைத் தருவதால்..

    ReplyDelete
  3. //புற்றினுள் அடைந்திருந்த சிறுமி.//

    புற்றறுத்த சிறுமின்னு சொல்லி இருந்தா இன்னும் சரியா இருக்கும் என்று நினைக்கிறேன். கவிதையும் மொழியும் மிக அருமையா இருக்கு ஆனா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த சிறுமியையும் அவளை பற்றி அரட்டும் உன்னையும் நினைத்து

    ReplyDelete
  4. நீண்ட நாட்களுக்குப் பிறகான வருகை

    படிம சித்திரம் :)

    ReplyDelete
  5. வார்த்தைகளின் வீச்சு பிடிச்சிருக்கு..:)

    ReplyDelete
  6. அழுத்தமான வரிகள்..:)

    ReplyDelete
  7. ரெண்டு நாளா tryin.. :)
    to decode!

    ReplyDelete
  8. wow..! its really deep.. அருமை.. :-)

    ReplyDelete
  9. // புற்றினுள் அடைந்திருந்த சிறுமி //
    மனம் அழ நேர்ந்தது கெளரி..
    வலி உணர்கிறேன்..

    @ உயிரோடை
    // புற்றறுத்த // - கூடாது.
    புற்றினுள் தான் வேதனை .
    அதிலும் அடைப்படுதல் வலி..- சிறை..- தீர்வில்லாதது.

    ReplyDelete
  10. மனது கணத்துப்போகிறது. உஙகள் கவிதைகளை இதுவரை வாசிக்காமல் இருந்தது வருத்தம். ஆழமான கவிதை மட்டுமல்ல வெகு ஆழமான வாசிப்புக்கும் சிந்தனைக்குமுரியதும்கூட.

    ReplyDelete
  11. லாவண்யா அக்கா
    நேசமித்ரன் sir,
    அஹமது இர்ஷாத்
    புனிதா
    kartin
    RaGhaV
    Elango
    ஒவ்வொருவருக்கும் நிறைய நன்றிகள்

    Harani sir, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

    அருணா madam, the code is a cruel "c"--- cancer

    ReplyDelete
  12. yen kanneer thulikalum malaiththulikaludan sernthey otta vaikkum antha sarukaiyum, sirakaiyum.

    ReplyDelete