நிலவொளியின் வெண் மடியில்
நீண்டதொரு கவிப்பொழுதில்
நேசத்தின் நிறம் நீலமென்றாய்..
நிர்மல வான் ஆனாய்...
பிரிவுரைக்கும் தருணத்தில்
பிணங்கிய கருமுகிலென
பெருவானைப் போர்த்துகிறாய்
பித்தாக்கும் மௌனங் கொண்டு..
இரக்கமின்றி பொழிந்தும் தீர்க்கிறாய்
நிறங்களற்ற கொடுந்தனிமையை..
செயலற்று வான் வெறிக்கிறேன்
சினந்தொழுகிய கடுமழையில்
சிறகு கனத்து நிற்கும்
செவ்விழிப் பறவையென.
நல்லாயிருக்கு.. :-))
ReplyDeleteஉங்க கவிதைகள்தான் புத்தகமாக வரவேண்டும்.
ReplyDeleteவண்ணங்களே உணர்வு நிலைகளைப் பேசி விடுகிறது, வார்த்தைச் சிறகு கனத்த உங்கள் கவிதைப் பறவையில்.
ReplyDeleteவரிகள் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது
ReplyDeleteதொடருங்கள்.......
நன்றி
மழை -
ReplyDeleteதனிமை -
மழையின் தனிமை -
தனிமையின் மழை.
எப்படி வகைப்படுத்தினாலும் செயலற்று வான் நோக்கி வெறிக்கத் தோன்றுகிறது சிறகு கனத்து நிற்கும் செவ்விழிப் பறவையென..
//சினந்தொழுகிய
ReplyDeleteபுதுமையான வார்த்தைத் தெரிவு
அருமை!!
பிணங்கிய கருமுகில்...சினந்தொழுகிய கடுமழை... நல்ல சொல்லாட்சி இழையும் கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு கௌரி!
ReplyDeleteநேசித்தால் நிர்மலமாகும் வானம்,
ReplyDeleteபிரிந்தால் பிணங்கி கருமுகில் போர்த்துகிறதாம்
தனிமை நிறமிழக்க, கடு மழை சினந்தொழுகிகிறதாம்,
எண்ணத்தின் வண்ணங்களும் கற்பனையும் கனகச்சிதம். வாழ்த்துக்கள்
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு கௌரி.
ReplyDelete2011 உங்களுக்கு சிறப்பான வருடமாக அமைய வாழ்த்துக்கள்.
gowri, kavithai arumai.
ReplyDelete