12 June, 2010

காரணமின்றி..


அந்த
மிகுமழை இரவின்
மின்தடைப் பொழுதில்..
இருள் கண்டு மருண்டவளில்லை நான்..

கண்பார்த்துக் கதைத்திருக்க
கதைகளோ கதைப்போரோ
உடனிருக்கவில்லை.

குழந்தைமை தொலைத்தவர்க்கு
வீட்டுப்பாடம் செய்யவோ
விரல்களின் நிழல் கொண்டு
விளையாடி இருக்கவோ
விதிகளின்படி அனுமதியில்லை..

பாராமுகம் தாளாமல்
பகலிலேயே வெளியேறியிருந்தாள்
வழக்கமாயென் கவிதைகட்குப்
பாடுபொருள் தருவிக்கும் சிறுமி..

உறைந்திருந்த நினைவுகளைச்
சூடேற்றி விழுங்க
மௌனத்தின் வெம்மையே
போதுமாயிருந்தது..

எனினும் காரணமின்றி
எரிந்தபடி யிருந்தது
மெழுகுவர்த்தி..

நகர்த்துகையில் விரல் படிந்த
இரு துளி மெழுகை
இலகுவாய்ப் பிரித்தெடுத்தேன்
வெளிறிய பூவிதழென..

ஏனோ அது ஒத்திருந்தது
சுடர் தீண்டித் துடித்தடங்கிய
ஈசலின் மென்சிறகை.

காரணமின்றி நிகழ்ந்திருந்தது
அதன் மரணம்
உன் நிராகரிப்புகள் போலவே.
நன்றி அகநாழிகை

14 comments:

  1. ரொம்ப நல்லாருக்கும்மா!பூங்கொத்து!

    ReplyDelete
  2. நல்லாருக்கு.... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. மின்தடையிரவில் பூத்த கவிதையோ... மின் தடைக்கு நன்றி... நல்லாருக்குங்க...

    ReplyDelete
  4. சாதாரணமாகத் துவங்கிய மின்தடை இரவு சில பல மௌனங்களிலும் நிராகரிப்பிலுமாய் நிறைவுருகையில் ஏதோவொரு நெருடல் கவிதையைப் போல் காரணமின்றி வந்தே விடுகிறது.

    நல்லாயிருக்குங்க கவிதை..
    :)

    ReplyDelete
  5. ஏனோ அது ஒத்திருந்தது


    சுடர் தீண்டித் துடித்தடங்கிய


    ஈசலின் மென்சிறகை.


    காரணமின்றி நிகழ்ந்திருந்தது


    அதன் மரணம்


    உன் நிராகரிப்புகள் போலவே//

    மருத்துவரே நீண்ட நாளுக்குப் பிறகான கவிதை இது

    நன்றாக வந்திருக்கிறது கவிதை
    வாழ்த்துகள் தொடர்க !

    ReplyDelete
  6. //உறைந்திருந்த நினைவுகளைச்
    சூடேற்றி விழுங்க
    மௌனத்தின் வெம்மையே
    போதுமாயிருந்தது..//

    அருமையான வரிகள்..
    எனக்குப் பிடித்த மௌனத்தை இந்த வரிகள் தம் கையில் தாங்கிப் பிடித்து எரிகின்றன...மெழுகுவர்த்தியின் துணைக் கொண்டு..

    நீண்ட நாட்களுக்கு பிறகு...ஒரு அற்புதமான கவிதையோடு வந்திருக்கிறீர்கள் கெளரி..

    வழக்கம் போலவே...ஆனால் காரணங்களோடு யோசிக்க வைத்த கவிதை இது..

    அகநாழிகையில் வெளிவந்தமைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்..

    ( எப்போதும் போல்..எப்போதுமே எழுதிக்கொண்டிருங்கள்..)

    வாழ்த்துக்கள்..!
    [:)]

    ReplyDelete
  7. //உறைந்திருந்த நினைவுகளைச்
    சூடேற்றி விழுங்க
    மௌனத்தின் வெம்மையே
    போதுமாயிருந்தது..//


    வார்த்தைகளில் வசீகரம் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. வாழ்த்துக‌ள் கௌரி

    ReplyDelete
  9. நல்லாருக்குங்க.

    ReplyDelete
  10. //வெளிறிய பூவிதழென..
    ஏனோ அது ஒத்திருந்தது
    சுடர் தீண்டித் துடித்தடங்கிய
    ஈசலின் மென்சிறகை//


    கவிதை அற்புதம்

    ReplyDelete
  11. அழகு... ப்ரியா.. :)

    ReplyDelete
  12. I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    ReplyDelete
  13. yella varikalume mika arumai gowri. vaalththukkal.

    ReplyDelete