22 March, 2009

இன்னுமொரு பாடுபொருள்


பட்டம் விடுகையில் துவங்கிய

பனிக்கட்டி மழையின் துகளை

பெருமையாய்ச் சேகரித்து

பென்சில் பெட்டியில் வைத்துவிட்டு

அண்ணன் திருடியதாய்

அடுத்தநாள் அழுகிறாயே...

வேண்டுமானால் உன்

கடைவிழி நீர் பிடித்து

கவிப்பதனப் பெட்டியில்

குளிரூட்டி வைக்கட்டுமா?

பிறிதொரு கோடையில் மீண்டுமது

பாடுபொருளாய்ப் பயன்படக்கூடும்

9 comments:

  1. Kavidhai nalla irukkunga..!
    Particularly following lines.
    கடைவிழி நீர் பிடித்து
    கவிப்பதனப் பெட்டியில்
    குளிரூட்டி வைக்கட்டுமா?
    Great reading, keep it up.
    -Kris

    ReplyDelete
  2. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன்

    ReplyDelete
  3. வார்த்தை ஜாலம் அருமை ...
    கவிபதன பெட்டி போன்ற நல்ல வார்த்தைகளை தெரிந்து கொள்கிறேன் தங்கள் கவிதையில்
    அருமை ........

    ReplyDelete
  4. மிக்க நன்றி ராகா

    ReplyDelete
  5. //கடைவிழி நீர் பிடித்து
    கவிப்பதனப் பெட்டியில்
    குளிரூட்டி வைக்கட்டுமா? //

    கௌரி...ரொம்ப அழகா புதுசா எழுதுறீங்க...எப்பிடி இப்பிடில்லாம்னு வியக்கிறது மனம்!!!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  6. //கடைவிழி நீர் பிடித்து

    கவிப்பதனப் பெட்டியில்

    குளிரூட்டி வைக்கட்டுமா?//

    மிக அழகு...

    ReplyDelete
  7. @ அருணா, புதியவன்
    மிக்க நன்றி

    ReplyDelete
  8. இல்லாமல் இருக்கும் ஒன்று
    http://ithyadhi.blogspot.com/2008/12/blog-post.html

    ReplyDelete