08 November, 2021


 

வண்ணக் குமிழிகளை
வழியெங்கும் விடுக்கிறீர்.
கண்டபடி இருக்கிறேன்
காற்றில் குமிழி அசைய
குமிழிக்குள் காற்றசைவதை.
தீர்ந்து போகும் திவலைகளின்
நீர் வளையமெனச் சுழல்கிறீர்.
பருகிக் கொண்டிருக்கிறேன்
எப்போதும் இங்கிருக்கும்
குளத்தின் நீர்மையை.
துளை விழுந்த கூரை வழி
தூசுக் கற்றை நுழைவது போல்
லேசர் வெளிச்சத்துள்
புகுந்து களிக்கிறீர்.
இருளினூடும் ஒளியினூடும்
பிரபஞ்சத்தைத் நாடுகிறேன்.
தங்களது
பராக்கிரமங்களின் பட்டியலை
சலிக்காது படிக்கிறீர்.
பறந்தபடி தேடுகிறேன்
எனது கவிதைக்கான
அடுத்த சொல்லை.
சரிதான்!
உங்களுக்கு என்னை
ஒருபோதும் புரியாது

No comments:

Post a Comment