11 December, 2009

இறகு


முகில்கள் திரண்டிருந்ததோர்முற்பகலில்

பீலிகளற்ற பெண்மயிலொன்று

பூங்காவில் தனித்தலைகையில்

முதன்முதலாய்க் காணலுற்றோம்

நான் அவனையும்,
அவன் மயிலையும்..

விழிகள் சுருக்கி
இதழ்கள் பிதுக்கி
பாடநூல்கள் காட்டியது
இதுவல்ல என்பதாய்
ஓயாமல் புலம்பினான்..
ஏதோ நினைத்தவனாய்
புத்தகப்பையினின்று
இறகொன்றையெடுத்து
அதனருகில் இருத்திப்பின்
தந்தையின் விரல்பிடித்து நடந்தான்..

உருவமற்றதோர் இறகு
முளைக்கத் தொடங்கியது
என் எழுதுகோலின் முதுகில்.

8 comments:

  1. நேத்துதான் நினைச்சேன்.. ஜூலை மாதத்துக்கு அப்புறம் இவங்கள ஆளையே கானோம்மின்னு.. :-)))

    ReplyDelete
  2. கவிதை அருமை.. :-))

    ReplyDelete
  3. நல்வரவு

    கவிதை நல்லா இருக்குங்க

    ReplyDelete
  4. கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குங்க

    ReplyDelete
  5. //உருவமற்றதோர் இறகு
    முளைக்கத் தொடங்கியது
    என் எழுதுகோலின் முதுகில்.

    //

    :)

    ReplyDelete
  6. அழ‌கா எழுதி இருக்கீங்க‌ கௌரி. வாழ்த்துக‌ள்

    ReplyDelete
  7. அடச்சே..எப்படி இவ்வளவு காலம் உங்களை மிஸ் பண்ணேன்?

    தூள் கிளப்புறீங்க கௌரி!

    ReplyDelete