12 June, 2009

காணாமல் போனவை -2


தேடும் அவகாசமற்று
அலுவலக அவசரங்களில்
தொலைத்திருந்த
உவமைகளுள் ஒன்றை,
சமையல்காரர் விடுப்பெடுத்த நாளில்
கண்டுகொண்டேன் மீண்டும்..
குட்டிப்பிறைகள்
குழம்பில் மிதந்தன
தோலுரிக்கப்பட்டு
.

7 comments:

  1. கொல்றீங்க‌ளே கௌரி.
    அருமையா இருக்கு.

    ReplyDelete
  2. உவமையொன்று ஒளிந்திருந்ததை என்றிருக்க வேண்டுமோ?(!)
    வைத்திருந்ததுதானே தொலைய முடியும் ?
    துய்த்தால் தானே துறவு ?
    சரியா ?

    ReplyDelete
  3. @ நேசமித்ரன்..
    கருத்துக்கு நன்றி..
    இப்போது கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்..

    ReplyDelete
  4. அடேயப்பா !
    என்ன வேகம் !
    அபாரம் !
    கவிதை முழுமை பெற்றது
    ஒரு நிறைவான கடவுள் முகம் போல....

    ReplyDelete
  5. ஹாஹ்ஹா. நல்லாயிருக்குது.

    ReplyDelete
  6. அற்புதமான உவமையும் அதை தேடித் தெரிந்த விதமும்

    ReplyDelete